» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்: போட்டியின்றி தேர்வாகிறார்!!

திங்கள் 4, டிசம்பர் 2017 11:46:21 AM (IST)

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு துணைத்தலைவர் ராகுல் காந்தி இன்று காலை வேட்புமனு தாக்கல் செய்தார்.

காங்கிரஸ் துணைத்தலைவராக இருக்கும் ராகுல் காந்தி போட்டியின்றி வருகிற 11-ம் தேதி தலைவராக தேர்ந்து எடுக்கப்பட உள்ளார். காங்கிரஸ் துணைத் தலைவராக இருக்கும் ராகுல் காந்தி  இன்று  11 மணிக்கு வேட்பு மனுதாக்கல் செய்தார். காங்கிரஸ் தலைவர் தேர்தல் வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும். நாளை  வேட்பு மனு பரிசீலனை செய்யப்படும். காங்கிரஸ் தலைவர் தேர்தல் வேட்பாளர் நாளை அறிவிக்கப்படும்.  வேட்பு மனு வாபஸ் பெற கடைசி நாள் டிசம்பர் 11-ம்  தேதியாகும்.

எந்த போட்டியும் இல்லை என்றால் ராகுல் காந்தி டிசம்பர் 11-ம் தேதி காங்கிரஸ் தலைவராக தேர்ந்து எடுக்கப்படுவார்.  டிசம்பர் 16-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். டிசம்பர் 19-ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும். காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில்   ராகுல்காந்தி வேட்புமனு தாக்கல் செய்தார்.  முன்னதாக காலை 10 மணிக்கு ஜன்பாத்தில் உள்ள சோனியாகாந்தி இல்லத்திற்கு சென்று அவரிடம் ஆசி பெற்றார். பின்னர் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து ஆசி பெற்றார்.

காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர்கள்  ராகுல் காந்தியின் பெயரை முன்மொழிந்தார்கள் . தொடர்ந்து மாநில தலைவர்கள் வழிமொழிந்தார்கள்.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், எதிர்க்கட்சித் தலைவர் - குஜராத் குலாம் நபி ஆசாப், மூத்த காங்கிரஸ் தலைவர் ஏ.கே. அந்தோனி ஆகியோர் ராகுல் காந்தி பெயரை முன்மொழிந்தார்கள். நிகழ்ச்சியில்  காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மோசினா கிதவாய், ஷீலா தீட்சித், புதுச்சேரி முதல்வர் நாராயண சாமி, கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து

பொய்Dec 4, 2017 - 07:37:39 PM | Posted IP 37.21*****

ஏன் பீ சூப்பி கட்சி ஒரு சிறுபான்மை இனத்தவரை தேர்ந்தெடுக்கவில்லை

உண்மைDec 4, 2017 - 02:06:47 PM | Posted IP 122.1*****

ஏம்பா எதற்கெடுத்தாலும் சிறுபான்மையினர் தலித் என கூவும் நீங்கள் ஏன் ஒரு தலித் அல்லது சிறுபான்மையினரை காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்க கூடாது?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads

Nalam Pasumaiyagam


Universal Tiles Bazar


selvam aqua

New Shape Tailors

Johnson's Engineers






Thoothukudi Business Directory