» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

வருமான வரித்துறை சோதனைக்கும் பா.ஜ.,வுக்கும் எந்த தொடர்பும் கிடையாது: தமிழிசை விளக்கம்

வியாழன் 9, நவம்பர் 2017 12:40:37 PM (IST)

வருமான வரித்துறை சோதனைக்கும் பா.ஜ.,வுக்கும் எந்த தொடர்பும் கிடையாது என தமிழக பா.ஜ., தலைவர்  தமிழிசை விளக்கம் அளித்துள்ளார். 

வரி ஏய்ப்பு செய்ததாக வந்த புகாரை அடுத்து சென்னை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள சசிகலாவின் உறவினர்களுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபாட்டுள்ளனர். 

இதுகுறித்து தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறுகையில், மத்திய அரசை விமர்சிப்பதால் வருமான வரி சோதனை நடத்தப்படவில்லை. முதலீடு மீதான புகாரின் பேரிலேயே சோதனை நடத்தப்படுகிறது. மடியில் கனம் இல்லாவிட்டால் எதற்காக பயப்பட வேண்டும். வருமான வரித்துறை சோதனைக்கும் பா.ஜ.,வுக்கும் எந்த தொடர்பும் கிடையாது என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads


crescentopticals

Friends Track CALL TAXI & CAB (P) LTD



New Shape Tailors


Johnson's Engineers







Thoothukudi Business Directory