» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் கட்டாயம் நேரில் வந்து விளக்கம் அளிக்க வேண்டும்: சபாநாயகர் உத்தரவு

வெள்ளி 8, செப்டம்பர் 2017 11:53:55 AM (IST)

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் கட்டாயம் நேரில் வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என சபாநாயகர் தனபால் உத்தரவிட்டு உள்ளார்.

எடப்பாடி பழனிசாமியை முதல்-அமைச்சர் பதவியில் இருந்து விலக்கி விட்டு, தனக்கு சாதகமாக உள்ள ஒருவரை முதல்வர் பதவிக்கு கொண்டு வர வேண்டும் என்று டி.டி.வி. தினகரனும், சசிகலா குடும்பத்து உறுப்பினர்களும் ஆசைப்படுகிறார்கள். 

இதற்காக அவருக்கு 21 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். அந்த 21 எம்.எல்.ஏ.க்களையும் கவர்னரிடம் அழைத்து சென்ற தினகரன், முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று தனித்தனியாக கடிதம் கொடுக்க வைத்தார். தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் அனைவரும் புதுச்சேரியில் உள்ள ஒரு சொகுசு விடுதியில் தங்கி இருந்தனர். டி.டி. வி.தினகரனிடம் உள்ள எம்.எல்.ஏ.க்களில் 7 முதல் 10 பேரை இழுக்கும் முயற்சிகளில் எடப்பாடி அணியினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

நேற்று கம்பம் தொகுதி எம்.எல்.ஏ ஜக்கையன் எடப்பாடி அணிக்கு ஆதரவு தெரிவித்தார். இதை தொடர்ந்து தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் அனைவரும் குடகு மலையில் உள்ள ஒரு சொகுசு விடுதிக்கு மாற்றப்பட்டு உள்ளனர். இதற்கிடையே தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேரும் வருகிற 14-ந்தேதி (வியாழக்கிழமை) கட்டாயம் நேரில் ஆஜராக வேண்டும் என்று சபாநாயகர் தனபால் உத்தரவிட்டுள்ளார். எனவே இன்னும் 5 நாட்களில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் குடகுமலையில் இருந்து சென்னை வந்து சபாநாயகர் முன்பு ஆஜராக வேண்டியதுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads

New Shape Tailors


selvam aqua


Universal Tiles Bazar
Johnson's EngineersThoothukudi Business Directory