» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

தமிழக உள்ளாட்சி தேர்தலை நவ.17க்குள் நடத்தி முடிக்க வேண்டும்: உயர் நீதிமன்றம்உத்தரவு

திங்கள் 4, செப்டம்பர் 2017 3:43:23 PM (IST)

நவம்பர் 17-ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு உயர் நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது.

தமிழக உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் முடிவடைந்து 11 மாதங்கள் ஆகின்றன. இதனால் தமிழகம் முழுவதும் உள்ள உள்ளாட்சி கட்டமைப்புகளின் பணிகள் முடங்கியுள்ளதாக எதிர்கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர். முன்னதாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 17, 19 ஆகிய தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அந்த அறிவிப்பில் இடஒதுக்கீடுகள் முறையாக வழங்கப்படவில்லை என்று தி.மு.க. சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

இதையடுத்து உள்ளாட்சித் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு, உள்ளாட்சி நிர்வாகங்களை கவனிக்க தமிழக அரசு அதிகாரிகளை நியமித்தது. ஆனால் நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் பதவிக்காலமும் கடந்த ஜூன் மாதத்துடன் நிறைவடைந்துள்ளதால், மேலும் 6 மாதத்திற்கு பதவி நீட்டிப்பு செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தலை எப்போது நடத்த முடியும் என்பது தொடர்பாக மாநிலத் தேர்தல் ஆணையம் அறிக்கை அளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.  

இந்நிலையில், மாநில தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த அறிக்கையை பதிவு செய்த தலைமை நீதிபதி அமர்வு, உள்ளாட்சி தேர்தல் குறித்த தீர்ப்பை இன்று வழங்கினார்.  அதில், நவம்பர் 17-ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு உயர் நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது. செப்டம்பர் 18-க்குள் உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிக்கையை வெளியிட தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads

Johnson's Engineers




Universal Tiles Bazar




New Shape Tailors

selvam aqua






Thoothukudi Business Directory