» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

அரசியலில் எதிர்ப்பு தான் மூலதனம்: போர் வரும் போது பார்த்துக்கொள்வோம் : ரஜினிகாந்த் பேச்சு

வெள்ளி 19, மே 2017 10:38:00 AM (IST)

அரசியலில் எதிர்ப்பு தான் மூலதனம். அந்த எதிர்ப்பு இல்லாமல் யாரும் வளர முடியாது என்றும் போர் வரும் போது பார்த்துக்கொள்வோம் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.

ரஜினிகாந்த் கடந்த 15-ம் தேதி முதல் சென்னையில் ரசிகர்களைச் சந்தித்து வருகிறார். இன்றுடன் ரசிகர்களுடனான சந்திப்பு நிறைவடைகிறது. முதல்நாள் சந்திப்பின்போது ஆண்டவன் விரும்பினால் அரசியலுக்கு வருவேன் எனக் கூறியிருந்தார். இது பல்வேறு தரப்பில் இருந்தும் விமர்சனங்களை கொண்டுவந்தது. அவரது பேச்சுக்கு ஆதரவும் எதிர்ப்பும் இருந்தது.

இந்நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) ரசிகர்கள் மத்தியில் உரையாற்றிய ரஜினிகாந்த்,  ரசிகர்களை சந்தித்தது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. ரசிகர்கள் ஒழுக்கத்தை கடைபிடித்தது எனக்கு மிக்க மகிழ்ச்சி. ஒழுக்கம்தான் மிகவும் முக்கியமானது. ஒழுக்கமானது அவசியமானது. ஒழுக்கம் இல்லை என்றால் முன்னேற முடியாது. இப்போது போன்று எப்போதும் ஒழுக்கத்தை கடைபிடியுங்கள். இந்த விழாவை ஏற்படுத்தி, சரியாக நிர்வாகம் செய்தவர்களுக்கு நன்றி. 

எதிர்ப்பு இல்லாமல் வளரவே முடியாது. அரசியல் குறித்து நான் பேசியது இவ்வளவு பெரிய சர்ச்சையாகும் என நான் எதிர்பார்க்கவில்லை. எதிர்ப்பு இல்லாமல் வளர முடியாது. அதுவும், அரசியலில் எதிர்ப்புதான் மூலதனம். எனவே வாத விவாதங்கள் எழுவது இயல்பே. ஆனால், சமூக ஊடகங்களில் சிலர் மிகவும் கீழ்த்தரமாக எழுதுவது வருத்தமளிக்கிறது. இந்த வேளையில் நான் ஒரு விஷயம் தெளிவுபடுத்த விரும்புகிறேன். நான் தமிழனா என நிறைய பேர் கேள்வி எழுப்புகின்றனர். 

நான் வெறும் 23 ஆண்டுகள் மட்டும்தான் கர்நாடகாவில் இருந்திருக்கிறேன். 44 ஆண்டுகளாக தமிழகத்தில்தான் இருக்கிறேன். தமிழக மக்கள் என்னை ஆதரித்து, பெயரும், புகழும், பணமும் தந்து என்னைத் தமிழனாக ஆக்கிவிட்டீர்கள். அதனால் நான் பச்சைத் தமிழன். நீங்கள் என்னை இங்கிருந்து தூக்கிப்போட்டால் நான் இமயமலையில்தான் போய் விழுவேனே தவிர வேறு எந்த மாநிலத்துக்கும் சென்று விழமாட்டேன். தமிழக மக்கள் நல்ல உள்ளம் படைத்தவர்கள். தமிழக மக்கள் என்னை வாழ வைக்கும் தெய்வங்கள். உங்களால் நான் நன்றாக இருக்கிறேன். 

என்னை வாழவைத்த தெய்வங்களும் நன்றாக இருக்க வேண்டும் என நான் நினைப்பது தவறா? அதற்குத்தான் வேறு சிலர் இருக்கிறார்கள் நீ என்ன சரிசெய்யப்போகிறாய் எனக் கேட்கலாம். இருக்கிறார்கள். மு.க.ஸ்டாலின் இருக்கிறார். அவர் ஒரு சிறந்த நிர்வாகி. அன்புமணி ராமதாஸ் படித்தவர். விஷயம் தெரிந்தவர். நவீனமாக சிந்திக்கக்கூடியவர். திருமாவளவன் தலித்துகளுக்காக உழைப்பவர். சீமான் ஒரு போராளி. அவரது கருத்துகளைக் கேட்டு நான் பிரமித்துப் போய் இருக்கிறேன்.

இத்தனை பேரும் இருக்கிறார்கள். ஆனால், இங்குள்ள அரசியல் நிலவரம் சரியில்லை ஜனநாயகம் கெட்டுப்போய் இருக்கிறதே. மக்களின் சிந்தனையில் மாற்றம் கொண்டுவர வேண்டும். மக்கள் மத்தியில் மாற்றத்தை உண்டாக்க வேண்டும். அப்போதுதான் நாடு உருப்படும். ஒரு செடி வளர்க்க வேண்டுமானால் அதை மண்ணில் புதைத்து தண்ணீர் ஊற்றி நன்கு அழுத்துவோம். அப்போதுதான் அந்த விதை வெளியே வரும். அதேபோல் நம் மீதான விமர்சனங்களும். அதுவரையிலும் நம்மைச் சுற்றிவரும் நிந்தனைகள், விமர்சனங்கள் எல்லாம் நம்மை வலுப்படுத்தும்.

விமர்சனம் செய்பவர்கள் அவர்களுக்குத் தெரியாமலேயே நம்மை வலுப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். எனவே, போர் வரும்போது பார்த்துக் கொள்ளலாம். அதுவரை நீங்கள் உங்கள் வேலைகளை கவனித்து வாருங்கள். குடும்பத்தைக் கவனியுங்கள். எனக்கும் தொழில் இருக்கு உங்களுக்கும் தொழில் இருக்கு. போர் வரும்போது பார்த்துக் கொள்வோம். ஆண்டவன் இருக்கிறான்" என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Pop Up Here

CSC Computer Education


New Shape Tailors


Universal Tiles Bazar

Nalam Pasumaiyagam

selvam aqua

Black Forest Cakes


Johnson's Engineers



Thoothukudi Business Directory