» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

அ.தி.மு.க.வில் இருந்திருந்தால் முதல்–அமைச்சராகி இருப்பேன்: காங். தலைவர் திருநாவுக்கரசர் பேச்சு

சனி 7, ஜனவரி 2017 9:02:15 AM (IST)

அ.தி.மு.க.வில் இருந்திருந்தால் நான் முதல்–அமைச்சராகி இருப்பேன் என்று செஞ்சியில் நடந்த கல்லூரி விழா ஒன்றில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்தார்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் உள்ள தனியார் கல்லூரியில் நேற்று நடந்த பட்டமளிப்பு விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர் கலந்து கொண்டார். அப்போது மாணவ–மாணவிகளின் கேள்விகளுக்கு அவர் பதில் அளித்து பேசியதாவது:–

கேள்வி:– அ.தி.மு.க.வில் இருந்து ஏன் வெளியே வந்தீர்கள்?

பதில்:– எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்தே நான் அரசியலில் இருந்து வருகிறேன். அதன் பிறகு ஜெயலலிதாவுக்கு உறுதுணையாக இருந்து அவரது வெற்றிக்கு உறுதுணையாக இருந்தேன். பின்னர் அ.தி.மு.க.வில் இருந்து நான் நீக்கப்பட்டேன். ஆனால் அ.தி.மு.க.வில் நான் இருந்திருந்தால் முதல்–அமைச்சராகி இருப்பேன். அப்படி இல்லை என்றாலும் கூட ஓ.பன்னீர்செல்வம் இருந்த இடத்தில் நான் இருந்திருப்பேன். இதற்காக நான் வருத்தப்பட வில்லை.

ஆனால் இப்போது ஒரு கட்சியில் முதல்வராக இருக்கிறேன். அதுவும் 150 வருட பாரம்பரிய காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவராக உள்ளேன். கக்கன், காமராஜர் இருந்த இடத்தில் நான் இருப்பதை பெருமையாக கருதுகிறேன். இது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

கேள்வி:– 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தது நல்லதா? கெட்டதா?

பதில்:– பிரதமர் மோடி ரூ.500 மற்றும் ரூ.1,000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்தது தவறு என்பது தான் காங்கிரஸ் கட்சியின் கருத்து ஆகும். அம்பானியோ அல்லது பெரிய கோடீஸ்வரர்களோ கருப்பு பணத்தை வீட்டில் வைத்து இருக்கமாட்டார்கள். அவர்கள் தொழிலில் தான் முதலீடு செய்வார்கள். சரியான திட்டமிடல் இல்லாமல் மோடி அறிவித்து விட்டார். அப்படியே கருப்பு பணம் வைத்திருந்தாலும் அது இந்திய பணமாக இருக்காது டாலராகத்தான் இருக்கும். எனவேதான் இது மோசமான திட்டம் என ராகுல்காந்தியே தெரிவித்துள்ளார். இவ்வாறு அவர் பதில் அளித்தார்.


மக்கள் கருத்து

ஒருவன்Jan 9, 2017 - 08:48:44 PM | Posted IP 117.2*****

நல்லா காமெடி பன்றாங்க

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads


Nalam Pasumaiyagam





New Shape Tailors


Black Forest Cakes

selvam aqua

Panchai Dairy

CSC Computer Education



Thoothukudi Business Directory