» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

செயல்தலைவர் பதவியால் மகிழ்ச்சி அடையவில்லை: பொறுப்பாக கருதுகிறேன் - மு.க.ஸ்டாலின் உருக்கம்

புதன் 4, ஜனவரி 2017 12:50:09 PM (IST)



தி.மு.கவின் பல்வேறூ பொறுப்புகளுக்கு தேர்ந்து எடுக்கபட்டபோது நான் மகிழ்ச்சி அடைந்தேன். ஆனால் தற்போது அந்த மகிழ்ச்சி இல்லை என மு.க ஸ்டாலின் பேசினார். 

திமுக பொதுக்குழு இன்று காலை, அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் பொதுச்செயலாளர் அன்பழகன் தலைமையில் கூடியது. பொதுக்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் உட்பட 4 ஆயிரம் அழைப்புகள் வழங்கபட்டு இருந்தது. மேடையில் யாரும் ஸ்டாலினுக்கு சால்வை போடக்கூடாது என உத்தரவிடப்பட்டது.

இதில், முதலாவதாக மறைந்த உலக மற்றும் தமிழக அரசியல் தலைவர்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. தமிழகத்தின் முதல்வராக இருந்து மறைந்த ஜெயலலிதாவிற்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கியூபாவின் தலைவர் பிடல் காஸ்ட்ரோ மறைவிற்கும் இரங்கல் தீர்மானம் போடப்பட்டது. பின்னர், துக்ளக் பத்திரிகையின் ஆசிரியர் சோ. ராமசாமியின் மறைவிற்கும் இரங்கல் வாசிக்கப்பட்டது. மேலும், திமுகவைச் சேர்ந்த கோ.சி. மணி மற்றும் சற்குணப்பாண்டியன் ஆகியோரின் மறைவிற்கும் திமுக பொதுக் குழுவில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பொதுக்குழுவில் தலைவராக ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டார். இந்த தீர்மானத்தை க.அன்பழகன் முன்மொழிய, துரைமுருகன் அதனை வழி மொழிந்தார். அன்பழகன் அந்த தீர்மானத்தை வாசித்த போது திமுக பொதுக்குழு உறுப்பினர்கள் உற்சாகமாக கை தட்டி வரவேற்பு அளித்தனர். உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி வந்தபிறகும் கருணாநிதிக்கு தொண்டையில் செயற்கை சுவாசத்துக்காக போடப்பட்ட டியூப் இன்னும் அப்படியே இருக்கிறதாம். எனவே திமுகவின் தலைவராக கருணாநிதி தேர்வு செய்யப்பட்டு 48 ஆண்டுகளில் முதன் முறையாக அவர் இல்லாமல் பொதுக்குழு கூடியது.

கூட்டத்தில்  தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: நான் நன்றியுரையாற்ற வரவில்லை. ஏற்புரையாற்ற மட்டுமே வந்தேன். திமுக விதிமுறைகளில் திருத்தம் செய்து என்னை செயல் தலைவராக்கியுள்ளனர். செயல் தலைவராக நியமித்தது திடீரென எடுத்த முடிவு இல்லை. ஆலோசித்து தான் முடிவு எடுக்கபட்டது. சூழல் என்னை செயல் தலைவராக்கி உள்ளது. தலைவர் கருணாநிதி வராமல் பொதுக்குழு நடக்கிறது.கருணாநிதிக்கு இப்போது சற்று ஓய்வு தேவைப்படுகிறது.

நான் தி.மு.கவின் பல்வேறூ பொறுப்புகளுக்கு ஜனநாயக முறைப்படி தேர்ந்து எடுக்கபட்டுள்ளேன். அப்போது எல்லாம் நான் மகிழ்ச்சி அடைந்தேன் ஆனால் தற்போது அந்த மகிழ்ச்சி இல்லை.  தலைவர் கருணாநிதி உடல் நலம் சரி இல்லாத நிலையில் அந்த மகிழ்ச்சி எனக்கு வரவில்லை.  எனக்கு அளித்த செயல்தலைவர் பதவியை பதவியாக கருதவில்லை  எனக்கு அளித்த பொறுப்பாக கருதுகிறேன் இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து

சாமிJan 5, 2017 - 02:13:20 PM | Posted IP 59.93*****

அப்ப அண்ணனுக்கு கொடுத்துரு

மக்கள்Jan 5, 2017 - 01:04:02 PM | Posted IP 117.2*****

வாழ்த்துக்கள்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam



CSC Computer Education


Black Forest Cakes


Pop Up Here


Johnson's Engineers

New Shape Tailors

Universal Tiles Bazar

selvam aqua



Thoothukudi Business Directory