» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
பன்னம்பாறை ஆவே மரியா மழலையர் பள்ளி ஆண்டு விழா
வியாழன் 16, பிப்ரவரி 2012 6:14:21 PM (IST)

சாத்தான்குளம் அருகேயுள்ள பன்னம்பாறை விலக்கில் அமைந்துள்ள ஆவே மரியா மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் விளையாட்டு விழா மற்றும் ஆண்டு விழா ஆகிய இரும்பெரும் விழா நடந்தது.
முன்னதாக நடந்த விளையாட்டு விழாவுக்கு சாத்தான்குளம் யூனியன் சேர்மன் சுரேஷ்குமார் தலைமை வகித்தார். ஓய்வுப்பெற்ற தாசில்தார் தம்பிராஜ் ஈனோக் போட்டிகளை தொடங்கி வைத்தார்.
பின்னர் நடந்த ஆண்டுவிழாவுக்கு சாத்தான்குளம் பேரூராட்சித் தலைவர் ஜோசப் தலைமை வகித்தார். களக்காடு புனித ஜோசப் கல்வி நிறுவனத் தலைவர் தமிழ்செல்வன், பள்ளி தாளாளர் பீட்டர்ராஜ், பன்னம்பாறை பஞ்., தலைவர் ராதிகா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியை டென்சி வரவேற்றார்.
விழாவில் கோடன்குளம் புனித பால் கல்வி நிறுவனத் தலைவர் பால்ராஜ், ஆசிரியர்கள் லூர்துமேரி, குரூஸ் மதுரேந்திரன், டென்மார்க் நாட்டை சேர்ந்த மியே, இவா, மெட்டில்டா, ஹாலந்து நாட்டை சேர்ந்த மரியா ஆகியோர் பேசினர். இதில் விளையாட்டு போட்டிகள் மற்றும் கல்வியில் முதலிடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
தொடர்ந்து மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. நிகழ்ச்சிகளை ராஜா தொகுத்து வழங்கினார். இதில் விருதுநகர் தங்கம், ஜோஸ்பின், ஆசிரியர்கள் சொர்ணலதா, ப்ரைலா, செலின், ஹேமா, ஜெகதீஸ்வரி, சுகன்யா, இளமதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். உதவி ஆசிரியை ராஜம்மாள் நன்றி கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஐஐடி தேர்வு முடிவுகள் வெளியீடு: சென்னை மாணவன் 36வது இடம்
சனி 19, மே 2012 10:37:30 AM (IST)

நாசரேத் மர்காசிஸ் பள்ளியில் இலவச ஆங்கில பயிற்சி!
செவ்வாய் 1, மே 2012 3:29:21 PM (IST)

டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் சாதனை!
வியாழன் 5, ஏப்ரல் 2012 1:12:55 PM (IST)

நாசரேத் ஆசிரியருக்கு பணி நிறைவு பாராட்டு விழா!
செவ்வாய் 3, ஏப்ரல் 2012 9:18:29 AM (IST)

ஸ்ரீவைகுண்டம் கல்லூரி மாணவர்களுக்கு தீயணைப்பு மற்றும் மீட்ப்பு பணி பயிற்சி முகாம்
வியாழன் 29, மார்ச் 2012 4:58:27 PM (IST)

செவன்த்டே மெடரிக்குலேசன் பள்ளி ஆண்டுவிழா
வியாழன் 29, மார்ச் 2012 4:55:32 PM (IST)


