» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
சாத்தான்குளம் அரசு கல்லூரியில மாணவியர் பேரவை தொடக்க விழா
சனி 21, செப்டம்பர் 2024 10:41:54 AM (IST)

சாத்தான்குளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவியர் பேரவைத் தொடக்க விழா நடைபெற்றது.
வணிகவியல் துறைப் பேராசிரியை மரிய செல்வி ஜெயா வரவேற்றார். கல்லூரி பொறுப்பு முதல்வர் ஜமுனா ராணி தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சியினை ஆங்கிலத்துறை பேராசிரியை ஆனந்தி, தமிழ்த்துறை பேராசிரியை உமாபாரதி ஆகியோர் தொகுத்து வழங்கினர். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சுரண்டை காமராஜர் அரசு கலைக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் சின்னத்தாய்,, மாணவியர் பேரவை உறுப்பினர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இதில் மாணவர் பேரவைத் தலைவராக வணிகவியல் துறை மாணவி ஜீவிகா, துணைத் தலைவியாக கணினி அறிவியல் துறை மாணவி ஜெயப்பிரியா, செயலாளராக தமிழ்த்துறை மாணவி அபிநயா, இணைச் செயலாளராக வணிக நிர்வாகவியல் துறை மாணவி பர்வதம் மற்றும் ஆங்கிலத்துறை மாணவி பேச்சியம்மாள் கௌசல்யா, பொருளாளராக கணிதவியல் துறை மாணவி இந்துமதி பதவியேற்றனர்.
விழாவில் சாத்தான்குளம் கல்வி கழகத் தலைவர் ஜோசப், துணைத் தலைவர் லெட்சுமி நாராயணன், செயலர் ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். வணிகவியல் துறை மாணவி ஜீவிகா நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை கல்லூரி பேரவைப் பேராசிரியர்கள் கீதா, கோகிலா, வளர்மதி ஆகியோர் செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆர்.சி. நடுநிலைப் பள்ளியில் முப்பெரும் விழா
வியாழன் 26, ஜூன் 2025 12:04:59 PM (IST)

தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் பொன் விழா தொடக்க விழா
செவ்வாய் 24, ஜூன் 2025 10:41:21 AM (IST)

தூத்துக்குடி ஹோலி கிராஸ் பள்ளியில் சர்வதேச யோகா தினம்
சனி 21, ஜூன் 2025 11:28:16 AM (IST)

சக்தி வித்யாலயா பள்ளியில் சர்வதேச யோகா தினம்
சனி 21, ஜூன் 2025 11:18:39 AM (IST)

தூய இஞ்ஞாசியார் பள்ளியில் சுற்றுச்சூழல் தினம்
புதன் 18, ஜூன் 2025 3:09:33 PM (IST)

மாணவ, மாணவிகளுக்கு நோட்டு வழங்கும் விழா
செவ்வாய் 17, ஜூன் 2025 12:12:13 PM (IST)
