» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் இறால்கள், நண்டுகளின் இனம் கண்டறிதல் பயிற்சி!

புதன் 4, செப்டம்பர் 2024 12:11:38 PM (IST)



தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் "வணிக முக்கியத்துவம் வாய்ந்த இறால்கள் மற்றும் நண்டுகளின் இனம் கண்டறிதல்” பற்றிய பயிற்சி முகாம் நடைபெற்றது.

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் "வணிக முக்கியத்துவம் வாய்ந்த இறால்கள் மற்றும் நண்டுகளின் இனம் கண்டறிதல்” என்ற தலைப்பில் ஒரு நாள் பயிற்சி முகாம் மீன்வள உயிரியல் மற்றும் வள மேலாண்மைத் துறையால் நடத்தப்பட்டது. இப்பயிற்சி முகாமில், மீன் ஏற்றுமதி நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.  

இப்பயிற்சி முகாமின் துவக்க விழாவில் மீன்வள உயிரியல் மற்றும் வள மேலாண்மைத் துறை உதவிப்பேராசிரியர் ரா. துரைராஜா வரவேற்புரை ஆற்றினார். பேராசிரியர் ந. ஜெயக்குமார், சிறப்புரை வழங்கினார். இக்கல்லூரியின் முதல்வர் (பொறுப்பு) நீ. நீதிச்செல்வன் தலைமையுரை வழங்கி சிறப்பித்தார். அவருடைய உரையில் ஏற்றுமதி நிறுவனங்களில் இறால்கள் மற்றும் நண்டுகளை சரியாக இனம் கண்டறிதலின் அவசியம் பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.  

அதனைத் தொடர்ந்து, இறுதியாக க. கருப்பசாமி, உதவிப்பேராசிரியர் நன்றியரை வழங்கினார். உதவிப் பேராசிரியர்கள் ரா. துரைராஜா மற்றும் க. கருப்பசாமி இப்பயிற்சி முகாமை ஒருங்கிணைத்து நடத்தினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Thoothukudi Business Directory