» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

பாரதியார் வித்யாலயம் பள்ளியில் இருபெரும் விழா

புதன் 14, ஆகஸ்ட் 2024 12:39:20 PM (IST)



தூத்துக்குடி பாரதியார் வித்யாலயம் மேல்நிலைப்பள்ளியில் குலபதி. ஏ.பி.சி.வீரபாகு 42ம் ஆண்டு நினைவு விழாவும், வ.உ.சி.இலக்கிய மன்ற தொடக்க விழாவும் நடைபெற்றது

விழாவிற்கு ஏ.பி.சி. மகாலெட்சுமி மகளிர் கல்லூரி இணைப் பேராசிரியர் விஜய கலைவாணி தலைமையேற்று குலபதி ஏ.பி.சி. வீரபாகு நினைவு சொற்பொழிவு ஆற்றினார். மற்றும் எஸ்.ஏ.வி. மேல்நிலைப்பள்ளி முன்னாள் முதுகலை ஆசிரியர் சங்கரலிங்கம் இலக்கியமன்ற சிறப்பு சொற்பொழிவு ஆற்றினார்.

விழாவில் தலைமை ஆசிரியர் (பொறுப்பு )கோமா வரவேற்புரை நிகழ்த்தினார். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவை ஆசிரியை சங்கரி என்ற ரேவதி தொகுத்து வழங்கினார். விழா இறுதியில் ஆசிரியை அந்தோணி ஆஸ்மின் நன்றியுரை ஆற்றினார். விழாவிற்கான ஏற்பாடுகளை தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.


மக்கள் கருத்து

வீரபாகுAug 14, 2024 - 01:02:39 PM | Posted IP 162.1*****

யாருடைய குலபதி மக்கள் அனைவருக்குமா அல்லது விழா குடும்பதாருக்கு குலபதியா

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Thoothukudi Business Directory