» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியில் சான்றிதழ் படிப்புக்கான பட்டமளிப்பு விழா

வியாழன் 30, மே 2024 8:27:10 PM (IST)தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரி மாணவர்களுக்கு திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் தொழில் முனைவோர் மற்றும் சுயவேலை மேம்பாட்டு நிறுவனம் சார்பாக நடைபெற்ற சான்றிதழ் பாடத்திற்கான பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. 

கல்லூரியின் வணிகவியல் துறை சார்பாக தளவாடங்கள் மற்றும் கொள்கலன் முனைய மேலாண்மை மற்றும் வரி பயிற்சியாளர் படிப்புகளும், விலங்கியல் துறை மாணவர்களுக்கு அவசர உதவி மற்றும் இருதய பாதுகாப்பு உதவியாளர் படிப்புக்களும் மேற்கொள்ளப்பட்டு இக்கல்வியாண்டில் அனைவரும் தேர்ச்சி அடைந்து இப்பட்டத்தினை பெற்றுக் கொண்டனர். இச்சான்றிதழ் படிப்பில் திறன் வளர்க்கக்கூடிய பயிற்சிப் பட்டறைகளை கொடுப்பதோடு மட்டுமல்லாமல் வேலைவாய்ப்புக்குத் தேவையான ‘Hands on Training'யும் பல நிறுவனங்களோடு ஒப்பந்தம் செய்து நடத்தப்பட்டது. 

இவ்விழாவில் கல்லூரியின் செயலாளர் A.P.C.V. சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். பாரதிதாசன் பல்கலைக்கழகம், தொழில் முனைவோர் மற்றும் சுயவேலை மேம்பாட்டு நிறுவனத்தின் இயக்குநர் E.இராம்கணேஷ் சிறப்பு விருந்தினராகவும், மருத்துவர் T.நீலாம்புஜன், சுந்தரம் அருள்ராஜ் மருத்துவ நிறுவனம் மற்றும் மருத்துவமனை, தூத்துக்குடி, அமீர் ஆதாம், முதன்மை மனிதவள மேலாளர், தக்ஷின் பாரத் கேட்வே டெர்மினல் பிரைவேட் லிமிடெட், தூத்துக்குடி A.சக்கரவர்த்தி, பட்டய கணக்காளர், மது நீனா நிறுவனம், தூத்துக்குடி மற்றும் P.கிளிராஜா, SSS அசோசியேட் ஆகியோர்கள் சிறப்பு அழைப்பாளர்களாகவும் கலந்து கொண்டனர். கல்லூரியின் முதல்வர் சொ.வீரபாகு வரவேற்புரை வழங்கினார். விலங்கியல் துறைத் தலைவர் து.ராதிகா நன்றியுரை ஆற்றினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Thoothukudi Business Directory