» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
ஆலன் திலக் பள்ளி கராத்தே மாஸ்டருக்கு கலை வளர்மணி விருது!
செவ்வாய் 12, மார்ச் 2024 3:12:22 PM (IST)
நாசரேத் ஆலன் திலக் கராத்தே மற்றும் சிலம்பு பள்ளி மாஸ்டர் கராத்தே டென்னிசனுக்கு "கலை வளர்மணி” விருதினை மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி வழங்கினார்.
தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறை மற்றும் தூத்துக்குடி மாவட்ட கலை மன்றம் சார்பில் 2023–2024 ஆம் ஆண்டுக்கான விருதுகள் வழங்கும் விழாவில் மாவட்ட அளவிலான சிறந்த சிலம்பாட்டக் கலைஞர் மற்றும் சிறப்பு விருதுக்குரிய "கலை வளர்மணி” விருதினை ஆலன் திலக் கராத்தே மற்றும் சிலம்பப் பள்ளி சிலம்பம் மற்றும் கராத்தே மாஸ்டர் கராத்தே டென்னிசனுக்கு மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி வழங்கி பாராட்டினார்.
இந்நிகழ்ச்சியில் கலைஞர்களுக்கு விருதுகள், சால்வைகள் மற்றும் பணமுடிப்பு போன்றவை வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் சீனிவாசன், கலை பண்பாட்டு துறை உதவி இயக்குனர் கோபாலகிருஷ்ணன், தூத்துக்குடி அரசு பள்ளி தலைமை ஆசிரியர் சிவகாமி உட்பட முக்கிய அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.