» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
கோவில்பட்டி எஸ்எஸ்டிஎன்எம் கல்லூரியில் அஸ்ட்ரோ க்ளப் துவக்கவிழா
செவ்வாய் 12, மார்ச் 2024 10:51:26 AM (IST)
கோவில்பட்டி எஸ்எஸ்டிஎன்எம் கல்லூரியில் அஸ்ட்ரோ க்ளப் துவக்கவிழா நடைபெற்றது.
கோவில்பட்டி எஸ்எஸ்டிஎன்எம் கல்லூரியில் அஸ்ட்ரோனமி க்ளப் துவக்க விழாவில் கல்லூரி முதல்வர் செல்வராஜ் வாழ்த்துரைத்து துவக்கி வைத்தார். சச்சிதா வரவேற்புரை ஆற்றினார். சிறப்பு விருந்தினர் தூத்துக்குடி அஸ்ட்ரோ க்ளப் தலைவர் எழிலன் வான் இயற்பியல் கற்பதால் வாய்க்கும் வேலைவாய்ப்புகள் விளக்கினார்.
தமிழ்நாடு அஸ்ட்ரோனமி சயின்ஸ் சொசைட்டி மாநில செயற்குழு உறுப்பினர் முத்துசாமி வன்னியப்பன் டெலஸ்கோப் கையாள பயிற்சி அளித்தார். மாணவிகள் தொலைநோக்கி கையாண்டு வெற்றிகரமாக காட்சிகளை கண்டு மகிழ்ந்தனர். நிறைவாக பேராசிரியர் கணேஷ் நன்றியுரைத்தார்