» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

வன்னிமாநகரம் பள்ளியில் பண்பாடு, விளையாட்டு வாரப்போட்டி

திங்கள் 11, மார்ச் 2024 9:55:57 AM (IST)



வன்னிமாநகரம் பள்ளியில் பண்பாடு மற்றும் விளையாட்டு வாரம் போட்டிகள் நடந்தது.

திருச்செந்தூர் அருகே உள்ள வன்னிமாநகரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் கலை மற்றும் உள்ளார்ந்த திறன்களை வெளி கொண்டு வரும் விதமாக பண்பாடு மற்றும் விளையாட்டு வார போட்டிகள் நடந்தது. தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஆறுமுகநேரி 12வது வார்டு கவுன்சிலர் ஜெயராணி, பள்ளி மேலாண்மைக்குழு தலைவர்  பாலஜெயந்தி, கல்வியாளர் சக்திவேல், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் செல்வக்கனி, பெற்றோர் உறுப்பினர் தினகரன் ஆகியோர் பரிசுகள் வழங்கி பாராட்டினர். பள்ளி தலைமையாசிரியர் ஜேக்கப் ஜெபராஜ் பாண்டியன் நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

ஸ்பிக் நகர் பள்ளியில் பெற்றோர் தினவிழா!

திங்கள் 2, செப்டம்பர் 2024 3:16:46 PM (IST)


Sponsored Ads





Thoothukudi Business Directory