» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
நாகலாபுரம் பள்ளி தமிழ் ஆசிரியைக்கு பணி நிறைவு பாராட்டு விழா!!
சனி 9, மார்ச் 2024 10:54:56 AM (IST)
நாகலாபுரம் சாமி அய்யா நாடார் மேல் நிலைப்பள்ளியில், பட்டதாரி தமிழ் ஆசிரியைக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் தாலூகா நாகலாபுரம் சாமி அய்யா நாடார் மேல் நிலைப் பள்ளியில் 35 வருடம் 6 மாதங்கள் பணியாற்றிய பட்டதாரி தமிழ் ஆசிரியை செ. அன்பு என்பவருக்கு பள்ளி ஆசிரிய-அலுவலக ஊழியர்கள் மற்றும் பள்ளி நிர்வாக குழு சார்பாக பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு ஓய்வு பெற்ற ஆசிரியர் காசிராஜன் தலைமை ஏற்று ஏற்புரை ஆற்றினார். பள்ளி தலைமை ஆசிரியை சுப்புலட்சுமி வரவேற்புரை ஆற்றினார்.
பள்ளிச் செயலர் பால்பாண்டியன் சிறப்புரை ஆற்றினார். மேலும் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் ரவிசந்திரன், குணசீலன் மற்றும் பள்ளி நிர்வாக குழு உறுப்பினர் கண்ணபிரான், நாகலாபுரம் பள்ளிவாசல் தெரு நாடார் உறவின்முறை சங்க தலைவர் பாஸ்கர், பொருளாளர் வேல்முருகன், பள்ளி முன்னாள் ஆவன எழுத்தர் ரதி, அலுவலக உதவியாளர் கோடீஸ்வரன், கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். ஆசிரியர்கள் உமாமகேஸ்வரி, கவிதா, அசோகன், கௌதமன் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.
பள்ளி ஆசிரிய, அலுவலக உதவியாளர்கள் சார்பாக ஆசிரியை செ.அன்பு-க்கு தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது. பள்ளி செயலர் சார்பாக காமராஜர் பற்றிய புத்தகம் மற்றும் பள்ளி நிர்வாக குழு சார்பாக கேடயம் பரிசாக வழங்கப்பட்டது. பள்ளி ஆசிரிய-அலுவலக ஊழியர்கள் மற்றும் பள்ளி நிர்வாக குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு பாராட்டினர். தொடர்ந்து தமிழ் ஆசிரியை செ.அன்பு ஏற்புரை வழங்கினார். முடிவில் முடிவில் பள்ளி மூத்த முதுகலை ஆசிரியர் ஆறுமுகச்சாமி நன்றி கூறினார்.
கோ. சுரேஷ்குமார்கோவில்பட்டி.Mar 9, 2024 - 12:05:35 PM | Posted IP 172.7*****