» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

சாகுபுரம் பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா!

சனி 25, மார்ச் 2023 12:15:10 PM (IST)



சாகுபுரம் கமலாவதி சீனியர் செகண்டரி பள்ளியின் மழலையர் பிரிவு மாணவ- மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம், சாகுபுரம் கமலாவதி சீனியர் செகண்டரி பள்ளியின் மழலையர் பிரிவு மாணவ- மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் முதல்வர் அனுராதா தலைமை தாங்கினார்.பள்ளியின் அட்மினிஸ்ட்ரேட்டர் மதன் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியை சுப்புரத்தினா வரவேற்று பேசினார். 

டி.சி.டபிள்யூ நிறுவனத்தின் மூத்த செயல் உதவி தலைவர் சீனிவாசனின் துணைவியாரான நந்தினி சீனிவாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ -மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். விழாவில் தலைமை ஆசிரியர் ஸ்டீபன் பாலாசீர் நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை பள்ளியின் மழலையர் பிரிவு ஆசிரியர்கள் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory