» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

மதர் தெரசா பொறியியல் கல்லூரிக்கு 3.5 நட்சத்திர அந்தஸ்து : மத்திய கல்வி அமைச்சகம் வழங்கியது!

செவ்வாய் 22, நவம்பர் 2022 12:30:22 PM (IST)

தூத்துக்குடி மதர் தெரசா பொறியியல் கல்லூரிக்கு மத்திய கல்வி அமைச்சகம் 3.5 நட்சத்திர அந்தஸ்து வழங்கியுள்ளது. 

மத்திய கல்வி அமைச்சகம் 2021-2022 கல்வியாண்டுக்கான மதிப்பீட்டின் கீழ் மதர் தெரசா பொறியியல் கல்லூரிக்கு 3.5 நட்சத்திர அந்தஸ்து வழங்கியுள்ளது. 2019 ஆம் ஆண்டில்  மதர் தெரசா பொறியியல் கல்லூரியில் புதுமை கண்டுபிடிப்பு மையம் (Institution of Innovation council) அமைக்கப்பட்டது. இதன் மூலம்  தொழில்முனைவோராக மாற விரும்பும் மாணவர்களுக்காகவும், புத்தாக்கம் மிக்க ஆர்வமுள்ளவர்களுக்காகவும் பல்வேறு இணையதள கருத்தரங்குகள் செய்முறை பயிற்சி  பட்டறைகள் ஆகியவை நடத்தப்பட்டு வருகிறது.
     
புதிய கண்டுபிடிப்புகளுக்காக கல்லூரியின் பயன்பாட்டு ஆய்வகங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும்  கல்லூரி  மாணவர்கள் புதுமையான யோசனைகளை கொண்டு  புதுமையான  தயாரிப்புகளை   மாற்ற ஊக்குவிக்கப்பட்டு வருகின்றனர். இதன் மூலம் மாணவர்கள்  தொழில்முனைவோராக மாறி வெற்றிபெற்றுள்ளனர். இன்னும் சிலர் திட்டமிடுதலில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த மையத்தின் மெல்லாம்  மேற்கொள்ளப்படும் அனைத்து செயல்பாடுகளும் மூன்று வகைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. அவை  புதுமை கண்டுபிடிப்பு  மையத்தின்  காலமுறை செயல்பாடு,  மத்திய அமைச்சகத்தின் மூலம்  இயக்கப்படும் செயல்பாடு,  சுயமுயற்சி செயல்பாடு,  விழா கொண்டாட்ட செயல்பாடு ஆகும்.

மேலும், ஒவ்வொரு நிகழ்வின் முடிவிலும், மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தால் நிறுவப்பட்ட உயர் கல்வி நிறுவன மைய  இணைய முகப்பில்  குறிப்பிட்ட நேரத்திற்குள் அறிக்கைகள் பதிவேற்றப்படும். மேலும் புதுமை கண்டுபிடிப்பு மையத்தில் உள்ள 1809 நிறுவனங்களில், மதர் தெரசா பொறியியல் கல்லூரி இந்தியாவின் சிறந்த 59 மையங்களில் ஒன்றாக சிறப்பிடத்தைப்  பெற்று சாதனை படைத்துள்ளது.

இந்த சாதனை படைத்ததாக பாடுபட்ட பொதுமேலாளர் ஜெயக்குமார், கிருஷ்ணகுமார், கல்லூரி இயக்குநர் ஜார்ஜ் கிளிங்டன், கல்லூரி முதல்வர் ஜாஸ்பர்   ஞானச்சந்திரன், நிர்வாக மேலாளர் விக்னேஷ் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் ஆகியோரை ஸ்காட் கல்விக்குழும நிறுவனர் கிளிட்டஸ் பாபு, நிர்வாக இயக்குநர் அருண்பாபு ஆகியோர் பாராட்டினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

நாசரேத் சமுதாய கல்லூரியில் பரிசளிப்பு விழா!

செவ்வாய் 26, செப்டம்பர் 2023 3:32:41 PM (IST)


Sponsored Ads

Thoothukudi Business Directory