» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

கிராமபுற சேவையில் என்.ஏ.என் பள்ளி மாணவர்கள்!

செவ்வாய் 22, நவம்பர் 2022 12:23:26 PM (IST)நாகலாபுரம் எஸ்.ஏ.என். மேல் நிலைப்பள்ளி தேசிய மாணவர் படைசார்பில் கிராமபுற பகுதியில் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது. 

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட நாகலாபுரம் எஸ்.ஏ.என். மேல் நிலைப்பள்ளி 29-இன்டிபென்டன் கம்பெனி தேசிய மாணவர் படை தொண்டர்கள் பிரதம மந்திரியின் "தூய்மை இந்தியா” திட்ட செயல்பாட்டின்படி இ.ரெட்டியபட்டி கிராமபுற பகுதியில் தூய்மை பணியை மேற்கொண்டனர்.

பள்ளி நிர்வாக தலைவர் தங்கமணி தலைமை தாங்கி தூய்மை பணியின் அவசியம் குறித்து பேசி மாணவ தொண்டர்களை வாழ்த்தி பேசினார். தலைமை ஆசிரியர் சுப்புலட்சுமி, முதுகலை ஆசிரியர்கள் இரவிச்சந்திரன், ஆறுமுகச்சாமி, சுரேஷ்குமார், நர்மதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். என்.சி.சி. பொறுப்பு ஆசிரியர் ஜான்ஸ்டானி வரவேற்றார். 

பள்ளி என்.சி.சி.யை சேர்ந்த 95 மாணவ தொண்டர்கள் கலந்து கொண்டு இ.ரெட்டியபட்டி ஶ்ரீமகமாயி, காளியம்மன், கருப்பசாமி ஆகிய கோவில் பகுதியில் தூய்மைப் பணிகளை மேற்கொண்டனர். மேலும், மரங்களுக்கு நீர் பிடிப்புடன் நன்கு வளர தேவையான வட்ட பாத்தி அமைத்து சீர் செய்தனர். தொடர்ந்து சாலை ஓரப்பகுதியில் உள்ள முள் மரங்கள் நீக்கி சுத்தம் செய்தனர். 

தொடர்ந்து பள்ளியில் பல்வேறு தொட்டிகளில் மண் கலவை தயார் செய்து அலங்கார தாவரங்களை நடவு செய்து காட்சி படுத்தினர். சேவைப் பணிகளை மேற்கொண்ட மாணவ தொண்டர்களை கவுண்டன்பட்டி பஞ்., தலைவர் சமுத்திரகனி மாரிமுத்து, பஞ்., பள்ளி தலைமை ஆசிரியர் சந்திரா, ஊர் பிரமுகர்கள் குருநாதன், மாணிக்ககுரு, கருப்பசாமி, மாதவன், மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்ட முகவர் உமையாள் மற்றும் உலகநாதன் உட்பட பலர் பாராட்டி வாழ்த்தினர். பள்ளி ஆய்வக உதவியாளர் கணேசன் நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads


Thoothukudi Business Directory