» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
ஓட்டப்பிடாரம் வ.உ.சி. பள்ளி மாணவர்களுக்கு கணக்குப் பதிவியல் பயிற்சி!
வியாழன் 17, நவம்பர் 2022 5:49:00 PM (IST)

ஓட்டப்பிடாரம் வ.உ.சி. அரசு மேல்நிலைப் பள்ளியில் கணக்குப் பதிவியல் - தணிக்கையியல் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் வ.உ.சி. அரசு மேல்நிலைப் பள்ளியில் மேல்நிலை முதலாம் ஆண்டு கணக்குப் பதிவியல் மற்றும் தணிக்கையியல் பாடப்பிரிவில் படிக்கும் மாணவர்களுக்கு தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, ஓட்டப்பிடாரம் கிளையில் 5 நாட்கள் பயிற்சி நடைபெற்றது. கிளை மேலாளர் பழனீஸ்வரன் தலைமையில் வங்கி பணியாளர்கள் இப்பயிற்சியினை அளித்தனர்.
பயிற்சியில் கலந்து கொண்ட மாணவ, மாணவியர்களுக்கு ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா பயிற்சி சான்றிதழ் வழங்கி பாராட்டினார். இந்நிகழ்ச்சிக்கு ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ரமேஷ் முன்னிலை வகித்தார். இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை பள்ளித் தலைமையாசிரியர் மேரி தலைமையில் தொழிற்கல்வி ஆசிரியர் கள்ளாண்டபெருமாள் மற்றும் பயிற்சி ஆசிரியர்கள் மகேஷ் பிரிவின் ஆகியோர் செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மாவட்ட அளவிலான கட்டுரை போட்டி: சாத்தான்குளம் பள்ளி மாணவன் சிறப்பிடம்! .
சனி 25, நவம்பர் 2023 8:33:49 PM (IST)

நாசரேத் பாலிடெக்னிக் கல்லூரியில் மரக்கன்று நடும் விழா
செவ்வாய் 21, நவம்பர் 2023 10:28:52 AM (IST)

புனித லூக்கா செவிலியர் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரவேற்பு!
வியாழன் 16, நவம்பர் 2023 10:06:00 AM (IST)

குழந்தைகள் தின விழா: தேசத் தலைவர்களின் வேடம் அணிந்து அசத்திய மாணவர்கள்
புதன் 15, நவம்பர் 2023 3:17:50 PM (IST)

நாசரேத் பள்ளிகளில் குழந்தைகள் தினவிழா!
புதன் 15, நவம்பர் 2023 10:17:29 AM (IST)

தூத்துக்குடி ஜாண்சன் பள்ளியில் குழந்தைகள் தினவிழா
செவ்வாய் 14, நவம்பர் 2023 5:36:50 PM (IST)
