» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

நாகலாபுரம் மாணவ, மாணவியர்களுக்கு பசுமை பாதுகாவலர் விருது

புதன் 16, நவம்பர் 2022 8:44:41 PM (IST)



நாகலாபுரம் பள்ளி +1,+2 வேளாண் அறிவியல் கல்வி மாணவ-மாணவியர்களுக்கு " பசுமை பாதுகாவலர் விருது” வழங்கும் விழா நடந்தது 

"மரங்கள் மற்றும் மூலிகை செடிகளை நேசிக்கும் மாணவர்களை ஊக்கப்படுத்துவதே சுற்றுச் சூழலை காக்கும் ஒரே வழி” என்ற நோக்கத்தில் தனது இல்லம் மற்றும் பொது இடங்களில் பசுமைப் பணி செய்து வரும் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட நாகலாபுரம் சாமி அய்யா நாடார் மேல்நிலைப் பள்ளி +1,+2 வேளாண் அறிவியல் கல்வி மாணவ- மாணவியர்கள் 10 பேர் இனம் கண்டு அவர்களுக்கு "பசுமை பாதுகாவலர் விருது” வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் நடந்தது.

தலைமை ஆசிரியை சே. சுப்புலட்சுமி தலைமை தாங்கி தர்மபுரி பசுமை அறக்கட்டளை, தருமம் அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்ட "பசுமை பாதுகாவலர்” விருது வழங்கி வாழ்த்தி பேசினார். தொழிற்கல்வி ஆசிரியர் கோ.சுரேஷ்குமார் முன்னிலை வகித்தார். +1 மாணவர் மு.கார்த்திக், அ.அய்யல்ராஜ், மாணவியர்கள் வி.அபிநயா, ச.அபிருதி, க.தாமரைச் செல்வி, +2 மாணவர் சி.ரவிக்குமார், மா.வசந்தகுமார், மு. பழனிக்குமார், மாணவியர்கள் சொ.மாலதி, ல.சசிகலா ஆகியோர் பெற்றுக்கொண்டனர். முன்னதாக என்.சி.சி பொறுப்பு ஆசிரியர் ஜே.ஜான்ஸ்டானி வரவேற்றார். சரண- சாரணியர் பொறுப்பு ஆசிரியர் ச.இரமேஷ் நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory