» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

மீன்வளக் கல்லூரியில் விழிப்புணர்வு கருத்தரங்கம் - ஆட்சியர் துவக்கி வைத்தார்

புதன் 9, நவம்பர் 2022 9:13:13 PM (IST)



தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ்,  மீன்வள மையம் மற்றும் உயர் மேலாண்மை கண்டுபிடிப்பு திட்டம் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கத்தினை துவக்கி வைத்தார்.

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் மீன்வள மையம் மற்றும் உயர் மேலாண்மை கண்டுபிடிப்பு திட்டம் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கத்தினை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், தமிழ்நாடு டாக்டர்.ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகம் துணை வேந்தர் ஜி.சுகுமார் முன்னிலையில் இன்று துவக்கி வைத்து தெரிவித்ததாவது: மாணவ, மாணவிகள் அனைவரும் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரை இணைக்க வேண்டும். மேலும் வாக்காளர் பட்டியலில் உள்ளவர்கள் தங்களது ஆதார் எண்ணை அதனுடன் இணைக்க வேண்டும். வாக்குச்சாவடிக்கு நேரில் சென்று மனு அளிக்க இயலாதவர்கள் இணையதளம் மூலமாகவும், செயலி மூலமாகவும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் செய்திட விண்ணப்பங்கள் அளிக்கலாம்.

தூத்துக்குடி மாவட்டம் 2 விஷயங்களுக்கு பெயர் பெற்றது. ஒன்று கிள்ளிகுளம் வேளாண் கல்லூரி மற்றொன்று மீன்வளக் கல்லூரி ஆகும். நமது மாவட்டத்தில் உள்ள கொற்கையில் சங்கம் வைத்து தமிழ் வளர்த்துள்ளார்கள். நாம் 7000 ஆண்டுகள் பழமையானவர்கள். அரசு நீட்ஸ் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அரசின் திட்டங்களை பயன்படுத்தி நீங்கள் கல்லூரி முடித்தவுடன் புதிய தொழில் முனைவோராக உருவாகி பொருளாதாரத்தை முன்னேற்ற வேண்டும். நமது மாவட்டத்தில் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. எனவே நம்பிக்கையை எப்பொழுதுமே இழக்க வேண்டாம் என தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம் முதல்வர் முனைவர்.அகிலன், சென்னை தொழில் முனைவோர் மேம்பாட்டு கண்டுபிடிப்பு நிறுவனம் கூடுதல் இயக்குனர் முத்துராமன், கணேசன் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory