» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

மாநில அளவிலான ஜூடோ சேம்பியன்சிப் போட்டியில் ஸ்ரீகாமாக்ஷி வித்யாலயா பள்ளி மாணவிகள் சாதனை

சனி 22, அக்டோபர் 2022 12:04:30 PM (IST)



மாநில அளவிலான ஜூடோ சேம்பியன்சிப் போட்டியில் தூத்துக்குடி  ஸ்ரீகாமாக்ஷி வித்யாலயா பள்ளி மாணவிகள் பதக்கம் வென்று சாதனை படைத்தனர். 

திருச்சி மாவட்டம் கொங்குநாடு பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற மாநில அளவிலான ஜூடோ சேம்பியன்சிப் போட்டியில் தூத்துக்குடி  ஸ்ரீகாமாக்ஷி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி மகிஷா பிரியங்கா வெள்ளிப் பதக்கமும், துர்கா ஸ்ரீதேவி வெண்கல பதக்கமும் வென்று தூத்துக்குடி மாவட்டத்திற்கும் பள்ளிக்கும் பெருமை சேர்த்துள்ளார்கள். வெற்றி பெற்ற மாணவிகளை பயிற்சியாளர் இராமலிங்க பாரதி, பள்ளி தாளாளர் அருணாச்சலம், பள்ளி முதல்வர் மீனாகுமாரி,  துணை முதல்வர் சுப்புலட்சுமி மற்றும் பள்ளியின் அனைத்து ஆசிரிய ஆசிரியைகளும் வாழ்த்தி பாராட்டினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory