» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

தூத்துக்குடி சக்தி வித்யாலயாவில் போதைபொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

திங்கள் 27, ஜூன் 2022 4:40:07 PM (IST)



தூத்துக்குடி மூன்றாவது மைல் சக்தி வித்யாலயா மெட்ரிக்குலேசன் பள்ளியின் சார்பில் உலக போதைபொருள் ஒழிப்பு தினத்தையொட்டி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளரும் முதல்வருமான ஆ.ஜெயாசண்முகம் தலைமை வகித்து மாணவ, மாணவியர்களிடம் போதை பொருளால் வீடுகளில் அமைதி குலைந்து சந்தோஷம் குறைவதையும், பொருளாதார சீர்கேடு நடப்பதையும் உடல்நலம் பாதிக்கப்படுவதையும் விளக்கி போதை பொருளை பயன்படுத்தாத புதிய சமுதாயத்தை நாம் உருவாக்க வேபண்டும் என்று உறுதி கூறுவோம் என்று மாணவ, மாணவிகளை உறுதிமொழி கூறச் செய்தார். 

அதன்பின் போதைபொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணியில் "போதை போதை என்று அலைபவர் குடும்பம் கெடும்”, "போதையற்ற நல்வழிப்பாதையை உருவாக்குவோம்”, "புகையிலை திண்ணாதே; புற்றுநோய்க்கு உள்ளாகாதே” போன்ற பல பதாகைகளை கையில் ஏந்தி மாணவ, மாணவிகள் காமராஜ்நகர், மூன்றாம் மைல்  ஆகிய பகுதியிலுள்ள மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பேரணியில் ஆசிரியைகளும் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பள்ளியின் துணைமுதல்வர் ரூபிரத்ன பாக்கியம் செய்திருந்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory