» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

வ.உ.சி பொறியியல் கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கம்!

சனி 28, மே 2022 3:04:58 PM (IST)



தூத்துக்குடி வ.உ.சி பொறியியல் கல்லூரியில் தேசிய அளவிலான ஒருநாள் கருத்தரங்கம் நடைபெற்றது.

தூத்துக்குடி அண்ணா பல்கலைக்கழக வ.உ.சி பொறியியல் கல்லூரியில் 2022ஆம் கல்வியாண்டில் இயந்திர பொறியாளர்கள் சங்கம் தேசிய அளவிலான "PEMETRIX-22" என்ற ஒருநாள் தொழில்நுட்பக் கருத்தரங்கம் இன்று நடைபெற்றது. இக்கருத்தரங்கில் அண்ணா பல்கலைக்கழக கல்லூரி, மதுரை மண்டலம் புல முதல்வர் கலங்கதுரை தலைமை விருந்தினராக கலந்து கொண்டார். 

மேலும் இந்த கருத்தரங்கின் அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள், அரசு பொறியியல் கல்லூரிகள், சுயநிதி பொறியியல் கல்லூரிகள் மற்றும் தேசிய அளவிலான பல்கலைக்கழகங்களில் பட்டம் பயிலும் பொறியியல் மாணவ மாணவியர் கலந்து கொண்டனர். இந்த தொழில்நுட்பக் கருத்தரங்கில் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பித்தல் (PAPER PRESENTATION), திட்ட அறிக்கை சமர்ப்பித்தல் (PROJECT EXPO), பொறியியல் வினாடி வினா (TECHNICAL QUIZ) போன்ற தொழில்நுட்பம் தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. 

இக்கருத்தரங்கை தூத்துக்குடி அண்ணா பல்கலைக்கழக வ.உ.சி பொறியியல் கல்லூரி புல முதல்வர் சி.பட்டர் தேவதாஸ், இயந்திரவியல் துறைத் தலைவரும் கருத்தரங்கின் ஒருங்கிணைப்பாளருமான ஆர்.ஏ.மலைராஜன், இயந்திர பொறியாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் நவன், அன்டன ஸ்டெனயோ, மணிகண்டன் மற்றும் பொறுப்பாளர்கள் கார்த்திகேயன், ராஜ்குமார் உதவிப் பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அலுவலர்கள் சிறப்பாக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory