» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
நாசரேத் ஆர்ட் தொழிற்பள்ளியில் மே தினவிழா : முன்னாள் மாணவர்கள் பங்கேற்பு
செவ்வாய் 3, மே 2022 3:10:18 PM (IST)

நாசரேத் ஆர்ட் தொழிற்பள்ளியில் முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் மே தின விழா கொண்டாடப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் ஆர்ட் தொழிற்பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கத்தின் 48 வது ஆண்டுவிழா மற்றும் மே தினவிழா பள்ளி வளாகத்தில் வைத்து நடைபெற்றது. முன்னாள் ஆசிரியர் தங்கராஜ் ஆரம்ப ஜெபம் செய்தார். ஊழியர் சாலமோன் ஜெபஸ்டின் வரவேற்றார்.விழாவிற்கு முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் இம்மானுவேல் அருள்தம்பி தலைமை தாங்கினார். உபதலைவர் சாமுவேல், செயலர் ஜோசப், பொருளாளர் ஸ்டீபன், இணைச்செயலாளர்கள் ஜான் சாலமோன், ஜான் தாமஸ், இம்மானுவேல் பால்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னாள் மாணவர்கள் ஸ்டீபன், சிவசங்கர் பயின்ற காலத்தில் உள்ள நினைவுகளைப் பகிர்ந்தனர். சிறப்பு விருந்தினராக சிங்கப்பூர் குருநாதன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். சங்க செயலர் ஜோசப் ஆண்டறிக்கை வாசித்தார். விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. நிறைவாக பள்ளி முதல்வர் ஸ்டீபன் நன்றியுரை ஆற்றினார். விழாவில் பள்ளியின் தாளாளர் எட்வர்ட் கண்ணப்பா முன்னிலைப் பயிற்சி மையத் தாளாளர் ஐசக் ராஜதுரை, மேலாளர் அகஸ்டின் மற்றும் முன்னாள் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பள்ளி சிற்றாலயத்தில் சிறப்பு ஆராதனையை குருவானவர் செல்வராஜ் நடத்தினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிளஸ் 2 பொதுத்தேர்வில் ஸ்ரீ கணேசர் மேல்நிலைப்பள்ளி 100 சதவீத தேர்ச்சி
திங்கள் 27, ஜூன் 2022 10:25:25 AM (IST)

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் பி.எம்.சி மெட்ரிக் பள்ளி மாணவி சாதனை: ஆட்சியர், எஸ்பி பாராட்டு
புதன் 22, ஜூன் 2022 10:13:54 AM (IST)

குரும்பூா் லூசியா பள்ளியில் மரக்கன்று நடும் விழா
செவ்வாய் 7, ஜூன் 2022 8:04:00 AM (IST)

தூத்துக்குடியில் இளம் விஞ்ஞானிகள் முகாம் நிறைவு
செவ்வாய் 31, மே 2022 8:24:18 AM (IST)

தூத்துக்குடி மீன் வளக்கல்லூரியில் வினா போட்டி
சனி 28, மே 2022 4:48:20 PM (IST)

வ.உ.சி பொறியியல் கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கம்!
சனி 28, மே 2022 3:04:58 PM (IST)
