» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

நாசரேத் மர்காஷிஸ் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம்!

வெள்ளி 8, ஏப்ரல் 2022 3:55:44 PM (IST)நாசரேத் மர்காஷிஸ் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட அணி எண் 58,160 ன் சார்பாக 7 நாள் சிறப்பு முகாம் நடைபெற்றது.
     
நாசரேத் மர்காஷிஸ் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட அணி (58 &160) சார்பாக கீழபுதுக்குளம் மற்றும் ஆசீர் வாதபுரம் கிராமத்தில் ஏழு நாள் சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமினை கல்லூரி முதல்வர் டாக்டர் அருள்ராஜ் பொன்னுதுரை தலைமை தாங்கி துவக்கி வைத்தார். வெள்ளமடம் ஊராட்சிமன்ற தலைவர் ஜாஸ்மின் வடிவேல் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். 

முகாமில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சட்ட விழிப்புணர்வுகுறித்து விளக்கப்பட்டது. பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி தூய்மை பணிகள் மற்றும் மரக்கன்று கள் நடுவது உள்ளிட்டவை நடைபெற்றது. மேலும் மருத்துவ முகாம் கண் பரிசோதனை செய்யப்பட்டது நீரழிவு ரத்த அழுத்தம் கொரோனா பாதிப்புகள் குறித்து டாக்டர் சோனியா ரமேஷ் விளக்கமளித்தார். கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. 

இரவில் மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.முகாம் ஏற்பாடுகளை கல்லூரி செயலாளர் எஸ்.டி.கே.ராஜன் ஆலோசனையின்பேரில் கல்லூரி முதல்வர் டாக்டர் அருள்ராஜ் பொன்னு துரை தலைமையில் துணை முதல்வர் பெரியநாயகம் ஜெயராஜ் முன்னிலை யில் நிதிகாப்பாளர் குளோரியம் அருள் ராஜ் திட்ட அலுவலர்கள் ஷெர்லின் ராஜா, சாமுவேல் தங்கராஜ் ஆகியோர் கோரேஸ் ஆகியோர் செய்து இருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory