» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் உலக தண்ணீர் தினம்

புதன் 23, மார்ச் 2022 3:53:47 PM (IST)



தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் உலக தண்ணீர் தினம் கொண்டாடப்பட்டது. 

தண்ணீரின் விலை மதிப்பற்ற தன்மையை நம் சமூகத்திற்கு உணர்த்தவும், நீர்வளங்களை பாதுகாக்கவும், விழிப்புணர்வை மக்களிடையே எடுத்துரைக்கவும் மார்ச் 22ம் தேதி உலக தண்ணீர் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் மற்றும் ரோட்டரி கிளப் ஆஃப் சீசைடு சார்பில் உலக தண்ணீர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. 

விழாவிற்கு கல்லூரி முதல்வர் (பொ) இரா.சாந்தகுமார் தலைமை வகித்தார். பேராசிரியை பத்மாவதி வரவேற்பு பேசினார். விழாவில் ரோட்டரி கிளப் ஆப் சீசைடின் தலைவர் சரவணக்குமார், முன்னாள் உதவி கவர்னர் ஆர்.எம்.பாலமுருகன் ஆகியோர் நீர் ஆதாரங்களின் முக்கியத்துவம் மற்றும் பயன்பாடு குறித்து எடுத்துரைத்தனர். செயலாளர் ஆஸ்கர் பெர்னான்டோ, முன்னாள் உதவி கவர்னர் ஆல்ட்ரின் மிரம்டா உட்பட பலர் கலந்து கொண்டனர். 

முன்னதாக பி.எப்.எஸ்.சி. முதலாம் ஆண்டு மாணவி சிவரஞ்சனி "நிலத்தடி நீரின் மதிப்பீடு” பற்றி தெளிவாக பேசினார். விழாவில் கட்டுரைப்போட்டி, பேச்சுப்போட்டி மற்றும் ஓவியப் போட்டிகள் இளநிலை மாணாக்கர்களுக்கிடையே நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணாக்கர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நீர்வளச் சூழலியல் மேலாண்மைத் துறையின் உதவிப் பேராசிரியர்கள் மணிமேகலை, மாணிக்கவாசகம் இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்தினர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory