» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
தூத்துக்குடி மீன் வளக்கல்லூரியில் கவிதை போட்டி!
திங்கள் 20, டிசம்பர் 2021 3:33:18 PM (IST)

தூத்துக்குடி மீன் வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் கவிதை எழுதும் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
இந்திய சுதந்திர தினத்தின் 75-வது ஆண்டு விழா கொண்டாத்தின் முன்னிட்டு, தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் ஒர் அங்கமான தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் டிசம்பர் மாதத்திற்கு "என் தேசத்தை நேசித்தல்” என்ற தலைப்பில் கவிதை எழுதுதல் போட்டி கல்லூரி மாணவ – மாணவிகளிடையே நடத்தப்பட்டது. இதில் தூத்துக்குடி நகர கல்லூரிகளில் பயிலும் மாணவ-மாணவியர்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர்.
இப்போட்டியில் காமராஜ் கல்லூரி தனுசியா, வ.உ.சி. கல்லூரி இவாஞ்சலின், மற்றும் போப்ஸ் கல்லூரி அற்புதராஜ் ஆகியோர் முறையே முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தை பிடித்தனர். வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ்களை கல்லூரி முதல்வர் (பொ) ந.வ.சுஜாத்குமார் வழங்கினார். வெற்றி பெற்ற மாணவர்களை கல்லூரியின் முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் வெகுவாக பாராட்டினார்கள். இப்போட்டியை சா.ஆதித்தன் மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் வெகு சிறப்பாக நடத்தினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பொதுத் தேர்வில் முதலிடம் பிடித்த மாணவருக்கு இலவச வீட்டுமனைப்பட்டா: கனிமொழி வழங்கினார்!
சனி 27, மே 2023 10:26:32 AM (IST)

தமிழ்நாட்டில் ஜூன் 7 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் - அமைச்சர் அன்பில் மகேஸ்
வெள்ளி 26, மே 2023 11:40:15 AM (IST)

மதர் தெரசா பொறியியல் கல்லூரியில் ஆண்டு விழா
திங்கள் 22, மே 2023 11:59:38 AM (IST)

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு: நாசரேத் புனித யோவான் பெண்கள் மேல்நிலைப்பள்ளி 99.5 சதவீதம் தேர்ச்சி!
சனி 20, மே 2023 10:58:32 AM (IST)

நாசரேத் புனித லூக்கா செவிலியர் கல்லூரியில் செவிலியர் தினவிழா
திங்கள் 15, மே 2023 3:46:49 PM (IST)

பிளஸ் டூ தேர்வில் நாசரேத் சாலமோன் பள்ளி சாதனை
புதன் 10, மே 2023 7:36:33 PM (IST)
