» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

பண்டாரம்பட்டி பள்ளியில் புதிய கட்டடம் திறப்பு விழா

வெள்ளி 8, அக்டோபர் 2021 10:22:47 AM (IST)தூத்துக்குடி பண்டாரம்பட்டி, தூ.நா.தி.அ.க. தொடக்கப் பள்ளியில் புதிய கட்டடத்தை பேராயர் தேவசகாயம் திறந்து வைத்தார். 

தூத்துக்குடி நாசரேத் திருமண்டல நிர்வாகத்தின் கீழுள்ள பண்டாரம்பட்டியில் தூ.நா.தி.அ.க. தொடக்கப்பள்ளி உள்ளது. அதில் தலைமையாசிரியராக நெல்சன் பொன்ராஜ் பணியாற்றி வருகிறார். கொரோனா காலத்தில் பள்ளி நடைபெறாததால் அக்காலத்தில் தான் வாங்கிய ஊதியத்திலிருந்து 7 இலட்சம் மதிப்பீட்டில் வே.செல்வராஜ் - பாக்கியமணி நினைவு பல்நோக்கு கட்டடத்தை கட்டி கொடுத்துள்ளார். அதன் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. 

திருமண்டல பெண்கள் சங்க தலைவி சாந்தினி தேவசகாயம், திருமண்டல பள்ளிகளின் மேலாளர் மைக்கேல், பள்ளி தாளாளர் ஆனந்த் சாமுவேல் ஜாண் தாமஸ், வாழையடி சேகரகுரு ரூபன் மணிராஜ், தூத்துக்குடி ஊரக வட்டாரக் கல்வி அலுவலர் பாஸ்கரன், நகர்புற வட்டாரக் கல்வி அலுவலர் ஜெயபாலன் துரைராஜ் தேவாசீர், திருவைகுண்டம் வட்டாரக் கல்வி அலுவலர் ஜெசுராஜன் செல்வக்குமார், பணி நிறைவு  வட்டாரக் கல்வி அலுவலர் பூபாலன் சாம்ராஜ், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலக கண்காணிப்பாளர் ஷியாம்ராஜ், டூவிபுரம் சேகர திருமண்டல பெருமன்ற உறுப்பிபினர்கள் தனசிங், டெய்சி தெபோராள், இம்மானுவேல், சேகர செயலாளர்  தினகரன் ஜெயசிங் உட்பட பலர் கலந்து கொண்டனர். பள்ளி ஆசிரியை பெல்சிபாய் நன்றி கூறினார்.  


மக்கள் கருத்து

கந்தேஷ்Oct 12, 2021 - 05:17:31 PM | Posted IP 162.1*****

2001- 2004 என்னுடைய ஆசிரியர். எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. என்னுடைய 7ம் வகுப்பில் நான் எடுத்த மதிப்பெண்கள் 350. வகுப்பில் 3ஆம் மாணவன்.ஆனால் கணிதத்தில் எடுத்த மதிப்பெண்கள் 24. அதிலிருந்து மீண்டு 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் நான் 99 மதிப்பெண்கள் பெற்று, பள்ளி அளவில் இரண்டாம் மாணவனாக தேர்ச்சி பெறுவதற்கு முக்கிய காரணம் ஐயா நெல்சன் அவர்கள். இன்று நான் இந்த நல்ல நிலைமையில் இருப்பதற்கு என்னுடைய பெற்றோருக்கு அடுத்து முக்கிய காரணம் ஐயா நெல்சன் அவர்கள் தாம். இப்படிக்கு, பெருமையுடன் தங்கள் மாணவன், கந்தேஷ்.

DURAI GOct 9, 2021 - 09:36:53 PM | Posted IP 108.1*****

1995 to 2000 வரை இவர் தான் எங்க வகுப்பு ஆசிரியர்.நல்லமுறையில் கற்பிக்கும்.நல்லாசிரியர்.இவர் மாணவன் என்பதில் எனக்கு பெருமை.G.துரை.psp school.pudukottai,Tuticorin.

J ஆர்ம்ஸ்டிராங்Oct 9, 2021 - 07:20:29 PM | Posted IP 173.2*****

நற்பணிகள் தொடர நல்வாழ்த்துக்கள்

S.Dinesh ManiOct 9, 2021 - 10:30:26 AM | Posted IP 173.2*****

இவங்க தான் என்னோட வாத்தியார் நான் இவங்க கிட்ட தான் 6,7,8 வகுப்புல படிச்சேன். கணக்கு வாத்தியாராக இருந்தாங்க.எனக்கு அப்பா கிடையாது ஆனால் சார் எனக்காக நான் முதுகலை கணிதம் பட்டம் முடிக்கும் வரை எனக்கு பல உதவிகள் செஞ்சாங்க. இப்போ நான் நல்ல நிலைமையில் இருப்பதற்கு எங்க அம்மாவும், நெல்சன் பொன்ராஜ் சார் தான் காரணம்.நான் உங்க மாணவன் னு சொல்ல பெருமையா இருக்கு சார்.....

S.Dinesh ManiOct 9, 2021 - 10:25:52 AM | Posted IP 162.1*****

இவங்க தான் என்னோட வாத்தியார் நான் இவங்க கிட்ட தான் 6,7,8 வகுப்புல படிச்சேன். கணக்கு வாத்தியாராக இருந்தாங்க.எனக்கு அப்பா கிடையாது ஆனால் சார் எனக்காக நான் முதுகலை கணிதம் பட்டம் முடிக்கும் வரை எனக்கு பல உதவிகள் செஞ்சாங்க. இப்போ நான் நல்ல நிலைமையில் இருப்பதற்கு எங்க அம்மாவும், நெல்சன் பொன்ராஜ் சார் தான் காரணம்.நான் உங்க மாணவன் னு சொல்ல பெருமையா இருக்கு சார்.....

superOct 8, 2021 - 03:46:31 PM | Posted IP 162.1*****

well done Mr. Nelson

தாமஸ்Oct 8, 2021 - 02:19:20 PM | Posted IP 173.2*****

சிறப்பு

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory