» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
அன்னம்மாள் மகளிர் கல்லூரியில் தூய்மை இந்தியா திட்டம்
வியாழன் 23, செப்டம்பர் 2021 3:24:52 PM (IST)

தூத்துக்குடி, அன்னம்மாள் மகளிர் கல்வியியல் கல்லூரியில் பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கல்லூரி வளாகத்தைத் தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது.
கல்லூரியின் இளங்கலை மற்றும் முதுகலை கல்வியியல் பயிலும் மாணவிகள் கல்லூரி வளாகத்தைத் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். கல்லூரி வளாகத்தில் உள்ள நெகிழிப்பைகள், நெகிழிப்பாட்டில்கள், காகிதங்கள் முதலியவற்றை அகற்றும் பணியினை மாணவிகள் ஆர்வமாகச் செய்தனர். மேலும் கல்லூரியில் அமைந்துள்ள மழைநீர் சேகரிக்கும் தொட்டி மற்றும் மழைநீர்வடிகால் ஆகியவற்றின் அருகில் உள்ள நெகிழிகளையும், குப்பைகளையும் அகற்றினர். இந்தத் தூய்மைப்படுத்தும் பணியினை கல்லூரி முதல்வர் அ.ஜாய்சிலின் சர்மிளா வழிகாட்டுதலின்படி கல்லூரியின் உடற்கல்வி இயக்குநர் நாகலட்சுமி செய்திருந்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாசரேத் ஆர்ட் தொழிற்பள்ளியில் மே தினவிழா : முன்னாள் மாணவர்கள் பங்கேற்பு
செவ்வாய் 3, மே 2022 3:10:18 PM (IST)

சாத்தான்குளம் பள்ளியில் கராத்தே சிறப்பு பயிற்சி முகாம்
திங்கள் 25, ஏப்ரல் 2022 12:06:50 PM (IST)

மர்காஷிஸ் கல்லூரியில் வளாக நேர்முகத் தேர்வு
வெள்ளி 8, ஏப்ரல் 2022 5:03:23 PM (IST)

நாசரேத் மர்காஷிஸ் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம்!
வெள்ளி 8, ஏப்ரல் 2022 3:55:44 PM (IST)

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் உலக தண்ணீர் தினம்
புதன் 23, மார்ச் 2022 3:53:47 PM (IST)

தூத்துக்குடியில் மாநில செஸ் போட்டி: ஏப். 2ல் துவக்கம்
புதன் 23, மார்ச் 2022 8:29:59 AM (IST)
