» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

சாத்தான்குளம் பள்ளியில் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசளிப்பு

வியாழன் 6, பிப்ரவரி 2020 10:12:33 AM (IST)சாத்தான்குளம் ஆவே மரியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசளிக்கப்பட்டது. 

சாத்தான்குளம் ஆவே மரியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் உலக அமைதி, அகிச்சை ஆகியவைகளை வலியுறுத்தி  பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கோலப்போட்டி, பேச்சுப்போட்டி, கட்டுரைபோட்டி, ஓவியப்போட்டி, நடன போட்டிகள் நடைபெற்றது. போட்டிகளை பள்ளி தாளாளர் பீட்டர்ராஜ் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். பள்ளி  முதல்வர் சொர்ணலதா, பள்ளியின் மேற்பார்வையாளர் சீனிவாசன் ஆகியோர்  முன்னிலை வகித்தனர். போட்டிக்கு நடுவர்களாக இத்தாலி நாட்டைச் சேர்ந்த மார்க்கோ இங்ளசிஸ், சான்றோ சியானி ஆகியோர் பணியாற்றினார். 

தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இத்தாலி நாட்டில் இருந்து வந்துள்ள மார்க்கோ இப்ளசிஸ், சான்றோ சியானி ஆகியோர் உலகயாத்திரை உறுப்பினராக உள்ளனர். இதன் அடிப்படையில் உலக அளவில் பல்வேறு நாடுகளுக்கு அமைப்பு மற்றும் பள்ளிகளுக்கு சென்று  மகாத்மாகாந்தியின் அமைதி, அகிச்சையை வலியுறுத்தி வருகின்றனர். இந்தியா வந்துள்ள இவர்கள்  கன்னியாகுமரி சென்று காந்தி மண்டபத்தில் யாத்திரையை முடித்து சொந்த நாட்டிற்கு திரும்பு கின்றனர் என பள்ளி தாளாளர் பீட்டர்ராஜ் தெரிவித்தார். சீனிவாசன் நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory