» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

காமாட்சி வித்யாலயம் பள்ளியில் தேசிய ஒருமைபாடு உறுதிமொழி ஏற்பு

திங்கள் 3, பிப்ரவரி 2020 2:08:33 PM (IST)தூத்துக்குடி காமாட்சி வித்யாலயம் பள்ளியில் தேசிய ஒருமைபாடு உறுதிமொழியினை மாணவ,மாணவிகள் எடுத்துக்கொண்டனர்.

தூத்துக்குடியில் உள்ள பல்வேறு பள்ளிகளில் ஜேசி பியர்ல்சிட்டி சார்பில் ஒருமைப்பாட்டு உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் காமாட்சி வித்யாலயம் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் 700 மாணவ, மாணவிகள் ஒருமைப்பாட்டு உறுதிமொழி ஏற்றனர். தூத்துக்குடி ஜே.சி.இண்டர்நேசனல் சார்பாக நடைபெற்ற இந்ந நிகழ்ச்சியில் ஒவ்வொரு பள்ளியிலும் அந்த அமைப்பை சார்ந்த தலைவர் பாலகணேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அது போல் பிற பள்ளிகளில் காலை நடைபெற்ற இறைவணக்கத்தினை தொடர்ந்து மாணவர்கள் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.எனது பள்ளியிலும்,வீட்டிலும்,சமூகத்திலும் சுற்றிலும் சுகாதார சுற்றுசூழலை பின்பற்றி ஆதரவளித்து நிலைநிறுத்துவேன். எனக்கும் குடும்பத்திற்கும், நாட்டிற்கும் ஆதரவு தரும் கொள்கைகளை நிலைநிறுத்துவேன், ஏமாற்றவோ, திருடவோ, பொய்சொல்லவோ தூண்டும் உணர்வினை ஒழிப்பேன், நேர்மை, நாணயம்,மரியாதை ஆகியவற்றை வாழ்நாள் கடமையாக ஏற்கிறேன் என மாணவ,மாணவிகள் உறுதிமொழி ஏற்றனர். நிகழ்ச்சியின் போது ஒவ்வொரு பள்ளியிலும் மரம் வளர்ப்பதின் அவசியத்தை மாணவர்களுக்கு எடுத்து கூறப்பட்டன. ஒவ்வொரு பள்ளியிலும் இரண்டு மரங்கள் நடப்பட்டன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory