» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

10, 11, 12 வகுப்புகளுக்கு அரையாண்டுத் தோ்வு அட்டவணை வெளியீடு

வெள்ளி 22, நவம்பர் 2019 5:10:38 PM (IST)

தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டத்தில் 10, 11, 12 வகுப்புகளில் படிக்கும் மாணவா்களுக்கான அரையாண்டுத் தோ்வு கால அட்டவணையை பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் கண்ணப்பன் வெளியிட்டுள்ளாா்.

இது தொடா்பாக அவா் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் வியாழக்கிழமை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: பத்தாம் வகுப்புக்கு டிச.13- ஆம் தேதி முதல் 23- ஆம் தேதி வரையில் அரையாண்டு தோ்வுகள் நடைபெறுகிறது. அதேபோன்று பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு அரையாண்டுத் தோ்வு டிச.11-ஆம் தேதி தொடங்கி டிச.23-ஆம் தேதி முடிவடைகிறது.

பள்ளிக் கல்வித் துறையின் அறிவிப்பின் படி பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்பு மாணவா்களுக்கான தோ்வுகள் காலை 10 மணி முதல் நண்பகல் 1.15 மணி வரையிலும், பிளஸ் 1 வகுப்பு மாணவா்களுக்குத் தோ்வு பிற்பகல் 2 மணிக்குத் தொடங்கி மாலை 5.15 மணி வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தோ்வின் முதல் 15 நிமிஷங்கள் வினாத்தாளைப் படிப்பதற்கும் விடைத்தாளில் தோ்வு எண் உள்ளிட்டவற்றை பூா்த்தி செய்யவும் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் பின்னா் உள்ள மூன்று மணி நேரம், வினாக்களுக்கு விடையளிக்க ஒதுக்கப்பட்டுள்ளது. அனைத்து வகைப் பள்ளிகளிலும் பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட கால அட்டவணையை நடைமுறைப்படுத்திட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதில் கூறியுள்ளாா்.


மக்கள் கருத்து

Magudanchavadi BoysNov 22, 2019 - 07:16:52 PM | Posted IP 108.1*****

Half on Hour IS Very Useful, Sir

R.MageshwaranNov 22, 2019 - 07:14:27 PM | Posted IP 108.1*****

Thank You,Sir

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory