» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

ஸ்ரீவைகுண்டம் கல்லூரியில் பாரம்பரிய உணவுத்திருவிழா

வெள்ளி 27, செப்டம்பர் 2019 5:26:44 PM (IST)ஸ்ரீவைகுண்டம் கல்லூரியில் பாரம்பரிய உணவுத்திருவிழா நடந்தது.

ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீகுமரகுருபரர் சுவாமிகள் கலைக் கல்லூரி மற்றும் தேசிய ஊட்டச்சத்து குழுமம் இணைந்து நடத்திய பாரம்பரிய உணவுத்திருவிழா, ஊட்டச்சத்தின் முக்கியத்துவம் குறித்த கருத்தரங்கம், விழிப்புணர்வு பேரணி மற்றும் மரம் நடுதல் ஆகிய நிகழ்ச்சிகள் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு, கல்லூரி முதல்வர் (பொறுப்பு) விஜயகுமார் தலைமை வகித்தார். ஸ்ரீவைகுண்டம் வட்டார குழந்தைகள் வளர்ச்சிப்பணி திட்ட அலுவலர் தங்கலெட்சுமி முன்னிலை வகித்தார். 

பொருளியியல் துறை பேராசிரியர் முருகன் வரவேற்றார். கல்லூரி செயலாளர் சங்கரநாராயணன் சிறப்புவிருந்தினராக கலந்துகொண்டு ‘’சத்தான உணவுகளை உண்பதின் அவசியம் குறித்து எடுத்துரைத்தார். அதனைத்தொடர்ந்து, கல்லூரி மாணவியர்கள் மற்றும் ஊட்டச்சத்து பணியாளர்கள் இணைந்து நடத்திய பாரம்பரியமிக்க சத்தான உணவுகளான காய்கறிகள், கீரைகள், பழங்கள், நவதானியங்கள் மற்றும் இயற்கை உணவுகள் இடம்பெற்ற மாபெரும் உணவுத்திருவிழா நடைபெற்றது. உணவுத்திருவிழாவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த உணவுவகைகளை கண்டு மகிழ்ந்த அனைவரும் சத்தான உணவுகளையும் உண்டும் மகிழ்ந்தனர்.

முன்னதாக கல்லூரியின் நாட்டுநலப்பணித் திட்ட மாணவ, மாணவியர்களுடன் இணைந்து ஊட்டசத்து பணியாளர்கள் கல்லூரி வளாகத்தினை சுத்தம் செய்து மரக்கன்றுகளை நட்டதுடன், ஊட்டசத்தின் அவசியம் மற்றும் நவதானிய உணவுகளின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு பேரணியையும் நடத்தினர். அதனைத்தொடர்ந்து ஊட்டச்சத்து பணியாளர்களின் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றது. இதில், ஊட்டச்சத்து திட்ட பணியாளர்கள், கல்லூரி பேராசிரியை-பேராசிரியர்கள், மாணவ, மாணவியர்கள், தாய்மார்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில், கல்லூரியின் நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர் பேச்சிமுத்து நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory