» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

தூ.நா.தி.அ.க. பள்ளியில் பெற்றோர்ஆசிரியர் கூடுகை

சனி 6, ஜூலை 2019 8:10:13 PM (IST)பண்டாரம்பட்டி, தூ.நா.தி.அ.க. தொடக்கப்பள்ளியில் பெற்றோர்ஆசிரியர் கூடுகை நடைபெற்றது.  

இந்த விழாவிற்கு சிவக்குமார் தலைமை தாங்கினார். முத்தையாபுரம் ஏ.வி.எஸ் தொடக்கப்பள்ளியின் தலைமையாசிரியர் ஆனந்தராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். தலைமையாசிரியர் நெல்சன் பொன்ராஜ் வரவேற்றுப் பேசினார். கடந்த மாதம் பள்ளிக்கு சீர் வரிசையுடன் வந்த அனைத்துப் பெற்றோர்களுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. புது யுகம் காண்போம் என்ற தலைப்பில் கலந்துரையாடல் நடைபெற்றது. சிவக்குமார் மற்றும் ஏ.வி.எஸ். தலைமையாசிரியர் ஆனந்தராஜ் மேற்காண் தலைப்பில் சிறப்புரையாற்றினர். 

இக்கல்வி ஆண்டு முதல் காலை 11 மணிக்கு மாணவர்களுக்கு தலைமையாசிரியர் தனது சொந்த செலவில் முளை கட்டிய கம்பு புல் தானிய உணவு வழங்குவது குறித்து பெற்றோர்கள் அனைவரும் பாராட்டு தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து அனைத்து மாணவர்களுக்கும் தலைமையாசிரியர் நெல்சன் பொன்ராஜ் தனது சொந்த செலவில் சீருடை, டை, பெல்ட் மற்றும் அடையாள அட்டை வழங்கினார். ஆசிரியை பெல்சிபாய் நன்றி கூறினார். 


மக்கள் கருத்து

MURUGANAug 5, 2019 - 11:09:00 AM | Posted IP 162.1*****

GOOD

தங்கக்கனிJul 10, 2019 - 02:34:56 PM | Posted IP 162.1*****

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் கடவுள் ஆசிர்வாதம் எப்பவும் இருக்கட்டும்

முரளிJul 6, 2019 - 10:57:04 PM | Posted IP 108.1*****

சூப்பர். மகிழ்ச்சி

John IsacJul 6, 2019 - 09:05:58 PM | Posted IP 108.1*****

மாணவர்களின் கல்வி வளர்ச்சி மற்றும் பள்ளி வளர்ச்சிக்காக தாங்கள் எடுத்து வரும் முயற்சிகளுக்கு மனமாார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

சக்தி வித்யாலயா பள்ளியின் 30-வது ஆண்டுவிழா

செவ்வாய் 11, பிப்ரவரி 2020 3:16:02 PM (IST)


Sponsored AdsThoothukudi Business Directory