» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

தூத்துக்குடி ஸ்ரீ சாரதா பாலமந்திர் ஆண்டு விழா

சனி 23, பிப்ரவரி 2019 10:27:37 AM (IST)தூத்துக்குடி ஸ்ரீ சாரதா பால மந்திர் மழலையர் பள்ளியின் 11 வது ஆண்டு விழா நேற்று வெள்ளிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.  

விழாவிற்கு வருகை புரிந்த அனைவரையும் பள்ளியின் தாளாளரும், நிர்வாக இயக்குனருமான கௌரி ராஜசேகர் வரவேற்றார். விழாவின் சிறப்பு விருந்தினராக வழக்கறிஞர் கௌசல்யா (Deputy area commander – Home Guards) வருகை புரிந்து சிறப்புரை அளித்தார். ஆத்திசூடி, நவமணிகள், பழமொழிகள், திருக்குறள், தமிழ்பாடல்கள், ஸ்ரீராம கிருஷ்ணர் அமுதமொழிகள், சாரதாதேவி பொன்மொழிகள், விவேகானந்தர் பொன்மொழிகள் ஆகியவற்றை மழலைச் செல்வங்கள் பாராமல் ஒப்பு வித்தார்கள்.  

வேலவா, வேலவா என்ற பாடலுக்கு காவடி ஏந்தி பள்ளி மாணவ, மாணவிகள் மிக அழகாக நடனமாடினார்கள். பெற்றோர்கள் பள்ளியின் சிறப்புகளை எடுத்துரைத்தார்கள்.  பள்ளியில் ஓராண்டு நிகழ்வுகள் பற்றிய காணொளி அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. இறுதியில் நன்றியுரையினை தாளாளர் கௌரி ராஜசேகர் வழங்கினார். கல்வி மற்றும் விளையாட்டில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு விருந்தினர் பரிசுகளை வழங்கினார். சிறப்பு ஆண்டு விழா ஏற்பாடுகளை கல்வி நிறுவனத்தின் தாளாளரும், ஆசிரிய பெருமக்களும், மாணவர்களும் சிறப்பாக செய்திருந்தனர்.


மக்கள் கருத்து

sirFeb 25, 2019 - 08:32:10 AM | Posted IP 162.1*****

is this religious school brainwashing religion ?

சுரேஷ் பாFeb 23, 2019 - 03:52:50 PM | Posted IP 108.1*****

School Day Function was so amazing..... Thanks to Gowri akka and the staff in Sri Saradha Vidya Mandir.. THe performance of the students was so good.......

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

சக்தி வித்யாலயா பள்ளியின் 30-வது ஆண்டுவிழா

செவ்வாய் 11, பிப்ரவரி 2020 3:16:02 PM (IST)


Sponsored AdsThoothukudi Business Directory