» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

தூத்துக்குடி கல்லூரியில் பிளாஸ்டிக் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

திங்கள் 31, டிசம்பர் 2018 3:54:40 PM (IST)தூத்துக்குடி காமராஜ் கல்லூரி நூலகம் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட அணி எண்.54 மற்றும் 56ன் சார்பாக மாணவ, மாணவியர்களுக்கிடையேயான பிளாஸ்டிக் ஒழிப்பு புத்தாண்டு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் து.நாகராஜன் தலைமை வகித்து தனது தலைமையுரையில் பிளாஸ்டிக் ஒழிப்பின் அவசியம் குறித்தும், பிளாஸ்டிக் மாற்று பொருட்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.வணிகவியல்துறைத் தலைவர் கு.காசிராஜன் பிளாஸ்டிக் பொருட்களின் தீங்கு மற்றும் அதனை ஒழிக்கும் பொருட்டான விழிப்புணர்வுப் பாடல்களை பாடி விழிப்புணர்வினை தூண்டினார். முன்னதாக நாட்டு நலப்பணித்திட்ட அதிகாரி அ.தேவராஜ் வரவேற்புரை ஆற்றினார். பா.பொன்னுத்தாய் நன்றியுரையாற்றினார். சுமார் 200 மாணவ, மாணவியர்கள் பங்கேற்று உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory