» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

ரெக்ட் பாலிடெக்னிக் கல்லூரியில் 9-வது அறிவியல் கண்காட்சி

ஞாயிறு 9, டிசம்பர் 2018 11:47:20 AM (IST)
தெற்கு விஜயநாராயணம் ரெக்ட் பாலிடெக்னிக் கல்லூரியில் 9-வது அறிவியல் கண்காட்சியை அண்ணா பல்கலைக்கழக டீன் (பொறுப்பு) சக்திநாதன் துவக்கி வைத்தார்.

நெல்லை மாவட்டம் நான்குநேரி அருகிலுள்ள தெற்கு விஜயநாராயணம் ரெக்ட் பாலிடெக்னிக் கல்லூரியில் 9-வது அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.அறிவியல் கண்காட்சியை அண்ணாபல்கலைக்கழக டீன் (பொறுப்பு) சக்திநாதன் துவக்கி வைத்து அறிவியல் பயன்பாடுகள் குறித்து மாணவர்களுக்கு விரிவாக எடுத்து ரைத்தார்.விழாவில் அறிவியல் சம்பந்தமான படைப்புகள், களிமண் உருவம் செய்தல், பாட்டுப் போட்டி, ஓவியப்போட்டி,அபிநயக்கூத்து போன்ற போட்டிகள் நடைபெற்றன.150-க்கும் மேற்பட்ட மாணவர்களின் அறிவியல் படைப்புகளை அண்ணா பல்கலைக்கழக டீன் (பொறுப்பு) சக்திநாதன் கண்டு மாணவ,மாணவிகளின் திறமைகளை பாராட்டினார்.திருநெல்வேலி கல்வி மாவட்டத்தைச் சார்ந்த பள்ளிகளில் இருந்து 1500-க்கும்மேற்பட்ட மாணவ,மாணவிகள் கண்காட்சியை கண்டு களித்தனர்.

முன்னதாக கல்லூரி முதல்வர் சுரேஷ் தங்கராஜ் தாம்சன் வரவேற்று பேசினார்.தாளாளர் முத்தையாபிள்ளை சிறப்புரைஆற்றினார். மெட்ரிக் பள்ளிகளுக்கான போட்டிகளில் முதல்பரிசுக்கான கோப்பையை திசையன்விளை ஜெய ராஜேஷ் மெட்ரிக் பள்ளியும், இரண்டாவது பரிசுக்கான கோப்பையை வள்ளியூர் கிங்ஸ் சிபிஎஸ்இ பள்ளியும்,மூன்றாம் பரிசுக்கான கோப்பையை சங்கர்நகர் ஜெயேந்திரர் மெட்ரிக் பள்ளியும் பெற்றனர்.

அரசுப் பள்ளிகளுக்கான போட்டிகளில் முதல் பரிசுக்கான கோப்பையை விஜய அச்சம்பாடு செந்திலாண்டவர் அருள்நெறி உயர்நிலைப்பள்ளியும், இரண்டாவது பரிசுக்கான கோப்பையை மூலக்கரைப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியும், மூன்றாம் பரிசுக்கான கோப்பையை பாளையங்கோட்டை தூயசவேரியார் மேல்நிலைப்பள்ளியும் பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கான பரிசுகளை ரோட்டரி கிளப் துணைத்தலைவர் ஜிம்மி காட்டன், பொறியாளர் மகேந்திரன் ஆகியோர் வழங்கினர். முடிவில் துணை முதல்வர் விமலா நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்கள் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory