» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

நாசரேத் சாலமோன் பள்ளியில் மறைந்த ஜெயலலிதாவிற்கு அஞ்சலி

புதன் 5, டிசம்பர் 2018 7:19:42 PM (IST)
நாசரேத் சாலமோன் மெட்ரிக் உயர்நிலைப் பள்ளியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு இரண்டாம் ஆண்டு நினைவு அஞ்சலி அனுசரிக்கப்பட்டது. 

இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைவர் சத்தியவதி மனோகரன் தலைமை தாங்கினார். பள்ளி தாளாளர் ஜமீன் சாலமோன் மறைந்த முதல்வரின் வாழ்க்கை குறித்து பேசினார். பள்ளி முதல்வர் அனி ஜெரால்டு முன்னிலை வகித்தார். பள்ளி மாணவர்களுக்கு மறைந்த முதல்வர் குறித்து பேச்சுப் போட்டி நடைபெற்றது. மாணவிகள் ஜெயலலிதாவைப் போல் வேடமணிந்து வந்திருந்தனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. உதவி முதல்வர் மகிலாசரவணன் நன்றியுரை ஆற்றினார். விழா ஏற்பாட்டினை ஆசிரியர்கள் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory