» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

மீன்வளக் கல்லூரி மாணவர்களுக்கு மென்திறன் பயிற்சி

வெள்ளி 12, அக்டோபர் 2018 3:32:43 PM (IST)தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் மாணவ-மாணவிகளுக்கு மென்பொருள் பயிற்சி அளிக்கப்பட்டது.

தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமான தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இளநிலை இரண்டாம், மூன்றாம் ஆண்டு மாணவ-மாணவிகளுக்கு "தன்னம்பிக்கையை மேம்படுத்த பத்து குறிப்புகள்;” என்ற தலைப்பில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.. இந்நிகழ்ச்சிக்கு மீன்வளக்கல்லூரியின் முதல்வர் கோ. சுகுமார் தலைமை தாங்கினார். தூத்துக்குடியில் உள்ள பார்ம்ஸ் நிறுவனத்தின் மூலம்      சு. வீரபத்திரன் பயிற்றுனராக கலந்து கொண்டார். 

மாணவர்கள் அனைவரும் தங்களின் தன்னம்பிக்கையை எவ்வாறு மேம்படுத்த வேண்டும் என்ற விரிவான பயிற்சி அளிக்கப்பட்டது. கலந்து கொண்ட மாணவர்கள் முழு ஆர்வத்துடன் பங்கு கொண்டு பயிற்சி மிகவும் பயனுள்ளதாய் இருந்ததாய் தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் இக்கல்லூரியின் இளநிலை இரண்டாம் ஆண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர். இந்நிகழ்ச்சியினை ஒருங்கிணைப்பாளாகள் சா. ஆதித்தன், மற்றும் பா. பத்மாவதி ஒருங்கிணைத்தனா


மக்கள் கருத்து

ராஜாOct 12, 2018 - 03:46:07 PM | Posted IP 162.1*****

g000d

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory