» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

ம.தி.மு.க. மாணவரணி சார்பில் பேச்சுப் போட்டி: நாசரேத் கல்லூரி மாணவி 2-வது இடம்!!

செவ்வாய் 21, ஆகஸ்ட் 2018 12:08:50 PM (IST)

ம.தி.மு.க. மாணவரணி சார்பில் நடைபெற்ற பேச்சுப் போட்டியில் நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ.பொறியியல் கல்லூரி மாணவி சுதா இரண்டாவது பரிசினை தட்டிச் சென்றார்.

ம.தி.மு.க மாணவரணி சார்பில், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகியமாவட்டங்களை உள்ளடக்கிய மண்டலஅளவில்,"பெரியார்-அண்ணா" என்ற தலைப்புகளில் பேச்சுப் போட்டி, நாகர்கோவிலில் ம.தி.மு.க.மாநில மாணவரணி துணைச் செயலாளர் எம்.ஆர். இராஜ்குமார் தலைமையில், தூத்துக்குடி மாவட்ட மாணவரணி செயலாளர் இராஜசேகர், திருநெல்வேலி மாவட்ட மாணவரணி செயலாளர் உள்ளிட்டோர் முன்னிலையில் நடைபெற்றது. விருதுநகர் மாவட்ட மாணவரணி செயலாளர் அ.மதியழகன் வரவேற்று பேசினார்.மாநிலப்பேச்சாளர் அனல் கண்ணன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். 

பேச்சுப் போட்டிக்கு நடுவர்களாக, நாகர்கோவில் இந்து கல்லூரி முன்னாள் முதல்வர் பி.நாகலிங்கம்பிள்ளை, சிவந்தி ஆதித்தனார் கல்லூரி பேராசிரியர் ஏ.அருணா, கே.பி.எஸ்.பழனி உள்ளிட்டோர் பணியாற்றினர். பேச்சுப் போட்டியினை கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் வெற்றிவேல் துவக்கி வைத்தார். பேச்சுப்போட்டியில், நாகர்கோவில் ஸ்காட் கிறித்தவ கல்லூரி மாணவர் இரா.பிரித்தீவ் முதல் பரிசையும், நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ பொறியியல் கல்லூரி மாணவி எஸ்.சுதா இரண்டாவது பரிசையும், பாளையங்கோட்டை கிறிஸ்து ராஜா ஆசிரியர் பயிற்சி நிறுவன மாணவி வெ.பானுமதி மூன்றாவது பரிசையும் பெற்றனர். கன்னியாகுமரி  மாவட்ட மாணவரணி செயலாளர் ஆர்.ஷாஜி நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory