» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

அழகப்பா பல்கலைக்கழகம் தூத்துக்குடி மையத்தில் மாணவர் சேர்க்கை

சனி 27, ஆகஸ்ட் 2016 5:42:33 PM (IST)

அழகப்பா பல்கலைக்கழகம் தூத்துக்குடி கல்விமையத்தில் தற்போது 2016-17ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. 

இது தொடர்பாக தூத்துக்குடி கல்விமைய ஒருங்கிணைப்பாளர் பா.கதிரேச பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு : தூத்துக்குடி வாட்டர் டேங்க் எதிரே அமையப் பெற்றுள்ள அழகப்பா பல்கலைக்கழக கல்வி மையமானது 2002ம் ஆண்டு முதல் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. எங்களிடம் பயின்ற பல மாணவர்கள் அரசுப் பணி, ஆசிரியப் பணி, வங்கி பணி மற்றும் தனியார் நிறுவனங்களில் உயரிய பதவிகளில் உள்ளனர். 

தற்போது கல்வியாண்டு 2016-17ற்கான மாணவர் சேர்க்கை தொடங்கி நடைபெற்று கொண்டிருக்கிறது. அரசுப் பணித்துறை குறிப்பாக வங்கிப் பணி போன்ற துறைகளில் நிறைய பணியிடங்கள் இன்னும் நிரப்பப்படமால் உள்ளது. இதற்கு பட்டப் படிப்பு மட்டுமே அடிப்படைக் கல்வி தகுதியாக உள்ளது. அந்த பட்டப் படிப்பை பொருளாதார சூழ்நிலையால் தவற விட்டவர்களுக்கு தொலைத்தூரக் கல்வி மூலமாக அந்த வாய்ப்பை அளிப்பதே எங்கள் நோக்கம்.

மேலும் இதன் மூலம் வேலைப் பார்த்துக் கொண்டே படித்து பட்டம் பெற்று பதவி உயர்வு, சம்பள உயர்வு பெறலாம். கல்லூரியில் விரும்பிய பாடம் கிடைக்காதவர்கள, விரும்பிய பாடம் எடுத்து படிக்கலாம். இளங்கலையில் பி.ஏ (தமிழ் ஆங்கிலம் வரலாறு), பி.எஸ்.சி (கணிதம் கணிணி அறிவியல்), பி.காம், பி.பி.ஏ போன்ற பாடப்பிரிவுகளும் முதுகலையில் எம்.ஏ (தமிழ், வரலாறு, ஆங்கிலம்), எம்.காம், எம்.சி.ஏ போன்ற பாடப்பிரிவுகள் இடம் பெற்றுள்ளது. முதுகலை மேலாண்மையில் (எம்.பி.ஏ) Logistics management,  International business    போன்ற ஏற்றுமதி சார்ந்த பாடப்பிரிவுகள் உள்பட 15-ந்திற்கும்  மேற்பட்ட பாடப்பிரிவுகளில் சேர்க்கை நடைபெறுகிறது.

இந்த ஆண்டு முதல் புதிதாக Diploma பாடப்பரிவில் Logistics, Export, HRM, Banking & finance , Production & operation management  மற்றும் பல புதிய பாடப்பிரிவுகள் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. மேலும் அழகப்பா பல்கலைக் கழகத்தில் இளங்கலை பயின்ற மாணவர்கள், முதுகலை பயில கல்வி கட்டணத்தில் 25சதவீத சிறப்பு கட்டணச் சலுகையும் வழங்கப்படுகிறது. மேலும் கடந்த மே மாதம் தேர்வு எழுதிய மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை www.alagappauniversity.ac.in என்ற இணையதளத்திலோ அல்லது கல்வி மையத்திற்கு நேரில் வந்து தெரிந்து கொள்ளலாம்.

தற்போது சேர்க்கை பெறும் மாணவர்களுக்கு உடனடியாக புத்தகங்கள் வழங்கப்படும.  மேலும் அடுத்த வருடம் முதல் கல்விக் கட்டணம் உயர வாய்ப்பிருப்பதால் இந்த ஆண்டிலேயே சேர்க்கைப் பெற்று பயனடையலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து

DANIELமே 19, 2017 - 08:26:27 AM | Posted IP 117.2*****

3 MONTHS ஆச்சு.

DANIELமே 19, 2017 - 08:24:33 AM | Posted IP 117.2*****

பொய் சொல்லாதீங்க யா..... நான் பணம் கட்டி ௩ மாசம் ஆச்சு. இன்னும் புக் வரல. போன் பண்ணி கேட்டா தருவோம் வெயிட் பண்ணுங்க னு சொல்றாய்ங்க...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory