» கல்வி / வேலை » வேலைவாய்ப்பு (தூத்துக்குடி)

உச்ச நீதிமன்றத்தில் குரூப் சி காலியிடங்கள் அறிவிப்பு: விண்ணப்பங்கள் வரவேற்பு

சனி 7, ஜனவரி 2023 12:30:03 PM (IST)

இந்திய உச்ச நீதிமன்றத்தில் நிரப்பப்பட உள்ள உதவிப் பதிவாளர், கிளை அதிகாரி, மூத்த நீதிமன்ற உதவியாளர், நீதிமன்ற உதவியாளர், இளநிலை நீதிமன்ற உதவியாளர் போன்ற குரூப் ‘சி’ பணியிடங்களை குறுகிய கால ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ள இந்திய உச்ச நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் ஓய்வுபெற்ற அரசு சாராத பணியாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

பணி: Assistant Registrar
சம்பளம்: மாதம் ரூ.45,000

பணி: Branch Officer
சம்பளம்: மாதம் ரூ.40,000

பணி: Senior Court Assistant
பணி: Court Assistant
பணி: Junior Court Assitant

சம்பளம்: மாதம் ரூ.35,000 மற்றும் அலுவலர் அல்லாத குரூப் ‘சி’ பணிகளுக்கு ரூ.20,000

வயதுவரம்பு: 65க்குள் இருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை:  அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Branch Officer, Recruitment Cell, Tilak Marg, New Delhi-110001. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடை நாள்: 20.1.2023. மேலும் விவரங்கள் அறிய கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Thoothukudi Business Directory