» கல்வி / வேலை » வேலைவாய்ப்பு (தூத்துக்குடி)

இந்து அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு: நவ.11 வரை விண்ணப்பிக்கலாம்

சனி 22, அக்டோபர் 2022 5:44:57 PM (IST)

இந்து சமய அறநிலையத்துறை சென்னை ராயப்பேட்டை அருள்மிகு சுசித்தி புத்தி விநாயகர் மற்றும் சுந்தரேஸ்வரர் கோயிலில் காலியாக பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

இதற்கு தகுதியானவர்களிடம் இருந்தும் நவம்பர் 11 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: கணினி இயக்குபவர் - 1
சம்பளம்: மாதம் ரூ.15,300 - 48,700

பணி: மின் பணியாளர் - 1
சம்பளம்: மாதம் ரூ.12,600 - 39,900

பணி: அர்ச்சகர் நிலை 2 - 1
சம்பளம்: மாதம் ரூ.13,200 - 39,900

பணி: ஓதுவார் - 1
சம்பளம்: மாதம் ரூ.12,600 - 39,900

பணி: சுயம்பாகி - 1
சம்பளம்: மாதம் ரூ.13,200 - 41,800

பணி: மேளக்குழு நாதஸ்வர பணிக்கும் மட்டும் - 1
சம்பளம்: மாதம் ரூ.15,300 - 48,700
 
பணி: பகல் காவலர் - 1
சம்பளம்: மாதம் ரூ.11,600 - 36,800

பணி: இரவு காவலர் - 1
சம்பளம்: மாதம் ரூ.11,600 - 36,800

பணி: துப்பரவாளர் - 1
சம்பளம்: மாதம் ரூ.10,000 - 31,500

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.  மின் பணியாளர் பணிக்கு விண்ணப்பிப்போர் சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். கணினி இயக்குபவர் பணிக்கு விண்ணப்பிப்போர் பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் தட்டச்சு பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

வயதுவரம்பு: 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், 45 வயது மிகாதவராகவும் இருக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:  செயல் அலுவலர், அருமிகு சித்தி புத்தி விநாயகர் மற்றும் சுந்தரேஸ்வர் திருக்கோயில், ராயப்பேட்டை, சென்னை-14

மேலும் விவரங்கள் அறிய hrce.tn.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Thoothukudi Business Directory