» கல்வி / வேலை » வேலைவாய்ப்பு (தூத்துக்குடி)

நீதித்துறையில் தட்டச்சர், சுருக்கெழுத்தர் பணியிடங்கள்: விண்ணப்பங்கள் வரவேற்பு!

புதன் 7, செப்டம்பர் 2022 10:58:56 AM (IST)

நாகப்பட்டினம் மாவட்ட நீதித்துறையில் காலியாக உள்ள தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்தர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Typist

காலியிடங்கள்: 15
சம்பளம்: மாதம் ரூ.19,500 - 62,000
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் அரசு தொழில்நுட்பத் தேர்வான தட்டச்சு பிரிவில் ஆங்கிலம் மற்றும் தமிழில் இளநிலை, முதுநிலைத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

பணி: Steno-Typist Grade-III

காலியிடங்கள்: 07
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் அரசு தொழில்நுட்பத் தேர்வான தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்தில் பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.20,600 - 65,500

வயதுவரம்பு: 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: https://districts.ecourts.gov.in/nagapattinam என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை சுய சான்றொப்பம் செய்து அதனுடன் ஒரு சமீபத்திய புகைப்படம் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: முதன்மை மாவட்ட நீதிபதி, முதன்மை மாவட்ட நீதிமன்றம், நாகப்பட்டினம். விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 09.09.2022


மக்கள் கருத்து

job seekerMar 21, 2023 - 02:23:20 PM | Posted IP 162.1*****

தேதி திருத்தம்: விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 09.09.2022

P. SubhashiniMar 21, 2023 - 06:46:47 AM | Posted IP 162.1*****

I have completed typing in english . I need a job

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Thoothukudi Business Directory