» சினிமா » செய்திகள்

Share

அசின் விவகாரம்: முக்கிய முடிவு எடுக்க திரையுலகம் இன்று கூடுகிறது

வியாழன் 29, ஜூலை 2010 11:32:25 AM (IST)

அசின் இலங்கைக்குச் சென்றதோடு, அங்கு போனதை நியாயப்படுத்தி தொடர்ந்து பேசி வரும் நிலையில், தடை விதித்தால் கவலை இல்லை, மன்னிப்பு கேட்க முடியாது என்று கூறியுள்ள பின்னணியில், இலங்கைக்குப் படப்பிடிப்புகளுக்காக போகலாமா, வேண்டாமா என்பது குறித்து இன்று திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் கூடிப் பேசி முடிவெடுக்கவுள்ளதாம்.

தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக மூன்றாவது முறையாகவும் ராம.நாராயணன் கடந்த 11ம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது குரூப்பைச் சேர்ந்தவர்கள் பிற பொறுப்புகளுக்குத் தேர்வாகியுள்ளனர்.

இதையடுத்து இன்று மாலை சங்க கட்டடத்தில் செயற்குழுக் கூட்டத்தைக் கூட்டியுள்ளனர். அதில் முக்கிய முடிவுகள் சிலவற்றை எடுக்கப் போகிறார்களாம். குறிப்பாக அசின் குறித்துப் பேசப் போகிறார்களாம். இலங்கைக்கு நடிகர் நடிகைகள் படப்பிடிப்புக்காக போகலாமா, கூடாதா என்பது குறித்தும் பேசப்படவுள்ளதாம்.

தயாரிப்பாளர் சங்கம் இதில் ஒரு முடிவு எடுத்த பின்னர் அதை நடிகர் சங்கம் பரிசீலனை செய்யும். அதன் பிறகே அதை ஏற்பது, ஏற்காதது குறித்து நடிகர் சங்கம் தீர்மானித்து பின்னரே இந்தப் பிரச்சினைக்கு தீர்வு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் தொடரும் செய்திகள்

மீண்டும் சட்டம் ஒரு இருட்டறை!

வெள்ளி 3, செப்டம்பர் 2010 9:44:24 PM (IST)

விஜய்யுடன் கை கோர்க்கும் அஜித்!

வெள்ளி 27, ஆகஸ்ட் 2010 8:39:24 PM (IST)


Sponsored Ads