» சினிமா » செய்திகள்

Share

ஆர்யா ஸ்ரேயா கலக்கும் சிக்கு புக்கு

செவ்வாய் 27, ஜூலை 2010 11:58:59 PM (IST)

மீடியா ஒன் குளோபல் எண்டர்டெய்ன்மென்ட் லிமிடெட் நிறுவனம் வழங்க,​​ "மெஜஸ்டிக் மல்டி மீடியா லிமிடெட்' நிறுவனம் தயாரிக்கும் பிரம்மாண்ட காதல் படம் "சிக்கு புக்கு.' இந்தப் படத்தில் ஆர்யா கதாநாயகனாக நடிக்க,​​ அவருக்கு ஜோடியாக ஸ்ரேயா நடித்துள்ளார்.

பாலிவுட் நாயகி அம்ரிதா ராவின் தங்கை,​​ ப்ரீத்திகா ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க,​​ மறைந்த இயக்குநரும்,​​ ஒளிப்பதிவாளருமான ஜீவாவின் சிஷ்யர் கே.​ மணிகண்டன் இயக்கி உள்ளார்.​ இப்படம் விரைவில் வெளிவர உள்ளது.

​இப்படம் குறித்து இயக்குநர் கே.மணிகண்டன் செய்தியாளரிடம் பேசுகையில்,​​​ "சிக்கு புக்கு'னு ஏன் தலைப்பு வைத்திருக்கோம்னா ஆர்யா,​​ ஸ்ரேயா இரண்டு பேரும் லண்டனிலிருந்து கிளம்பி காரைக்குடி வரை வருவாங்க.​ அதுக்காகதான் "சிக்கு புக்கு'னு டைட்டில் வைத்திருக்கிறோம்.​

ஆர்யா,​​ ஸ்ரேயாவை பார்க்குறது,​​ காதல் வர்றது,​​ அவங்க காதலை சொல்றது...​ இப்படி எங்க பார்த்தாலும் டிரெயின் சப்தம் இருக்கும்,​​ பேக்ட்ராப்ல டிரெயின்,​​ ரயில்வே ஸ்டேஷன் இருக்கும்.​ அது மட்டும் இல்லாம இரண்டு டிராக் மாதிரி உள்ள இந்த இரண்டு கேரக்டர்கள் ஒன்று சேர்ந்த பிறகு என்ன பண்றாங்க என்பதுதான் படம்.

காதல் கதைன்னு சொல்லும்போது நான்கு விஷயங்கள் முக்கியம்.​ அதில் முதலில் ஆர்ட்டிஸ்டோட கெமிஸ்ட்ரி.​ அதுதான் பிரதிபலிக்கும்.​ அதுக்கு ​ ஆர்யா இருந்தா நன்றாக இருக்கும்னு தோணுச்சி.​ நானும்,​​ அவரும் "உள்ளம் கேட்குமே' படத்தில் ​ இணைந்து பணியாற்றியிருக்கோம்.​ முக்கியமாக இந்தப் படத்தில் "கற்க நாம் கற்க..'னு ஒரு பாடல் இருக்கு.​ இது ஹிப் பாப் ஆல்பம் மாதிரியான ஒரு பாடல்.​ ஆர்யா இதுவரையிலும் நல்ல நடிகர் என்று பேர் வாங்கியிருக்கார்.​ ஆனால் நல்ல டான்ஸர்னு பேர் வாங்கல.​ அது இந்தப் பாடலில் நிறைவேறும்.​ அப்படி ஒரு ஆட்டம் ஆடியிருக்கார்.

​ஸ்ரேயாவுக்கு கவர்ச்சி நடிகைன்ற பேர் இருக்கு.​ அது இந்தப் படத்தில் மாற்றி அமைத்திருக்கிறோம்.​ இந்தப் படத்தில் அவங்களோட நடிப்பும் பேசப்படும் விதமாக இருக்கும்.​ ஸ்ரேயா நிஜ வாழ்க்கையில எப்படி பப்ளியான ஒரு பொண்ணோ...​ அதே மாதிரிதான் இந்தப் படத்திலேயும் நடிச்சிருக்காங்க.

​ஆர்யாவோட கேரக்டர் பெயர் அர்ஜுன்.​ வாழ்க்கையில இன்னைக்குதான் கடைசி நாள்னு நினைத்தா எப்படி இருப்போம்?​ அந்த மாதிரியான ஒரு கதாபாத்திரம்.​ ஸ்ரேயா காலேஜ் முடிச்சிட்டு இந்தியாவுக்கு வரணும்னு நினைக்கிற பொண்ணு.​ ​ இன்னைக்கு என்ன நடக்கும்?​ நாளைக்கு என்ன நடக்கும்?​ என்று ரொம்பவும் கணக்கு பார்க்குற பொண்ணு.​ இந்தப் படத்தில் வில்லன் கிடையாது.​ இவங்களோட இந்த இரண்டு விதமான குணாதிசயங்கள்தான் வில்லன்.​ சந்தானம்,​​ ஜெகன்,​​ ப்ரீத்தி ஆகியோரும் இருக்காங்க.

இந்தப் படத்திற்கு கலோனியல் கஸின்ஸ் ஹரி -​ லெஸ்லி இசையமைத்திருக்காங்க.​ ரொமான்டிக் பாடல்கள் வித்தியாசமா செலக்ட் பண்ணி செய்திருக்காங்க.​ பாடல்களை கவிஞர் வாலி,​​ பா.விஜய் இருவரும் எழுதியிருக்காங்க.​ பாட்டுக்கு நல்ல குரல் இருக்கணும்ங்கறதுக்காக பஞ்சாப்ல இருக்கிற படாலி பிரதர்ûஸ ​ பாட வைத்திருக்கிறோம்.​ அது ஒரு சோகப்பாட்டு.​ கேட்க அவ்வளவு அழகா இருக்கும்.​ அவங்களோட குரலுக்காக அமிர்தசரஸýக்கு சென்று பதிவு பண்ணி வந்தோம்.​ இந்தப் பாடல்களுக்கு அற்புதமா நடனம் அமைச்சிருக்காங்க ரேகா சின்னி பிரகாஷ்,​​ தினேஷ் ஆகியோர்.​ படத்தின் வசனத்தை எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதி இருக்கார்.

​​ இப்படி எல்லாத்தையும் நல்லா தேர்வு செய்து லொக்கேஷன் சாதாரணமாக வைக்க முடியாது என்பதற்காக லண்டன்ல போய் ஷூட் பண்ணினோம்.​ கலரா பண்ணியிருக்கோம்.​ அதில் லண்டன்ல சில்வர் கலர்.​ ஆனால் காதல் வந்த பிறகு பச்சையா இருக்கணும்.​ அதுக்காக கர்நாடகாவிலுள்ள மலைக்காடுகளில் எடுத்திருக்கோம்.​ இங்க இதுவரை யாரும் ஷூட் பண்ணினது கிடையாது.​ இதுக்கெல்லாம் நேர்மாறாக காரைக்குடியிலும் சில காட்சிகளை எடுத்திருக்கோம்.​ இந்த காட்சிகள் நம்மளோட கலாச்சார வட்டத்துக்குள் இருக்கும்.​ காரைக்குடி போர்ஷன் பிரவுன் கலரில் இருக்கும்.​ ​

​ ​ ஜீவா சாரோட பாதிப்பு இல்லாம எங்களால் ஒண்ணுமே பண்ண முடியாது.​ ஆரம்ப காலத்திலிருந்தே அவர் கூட இருக்குறதால நாங்க பிரேம் வைக்கிறது,​​ கலர் செலக்ட் பண்றது எல்லாத்திலயுமே அவர் எங்க பக்கத்தில் இருக்கிற மாதிரியே இருக்கு.​ அதனால் அவரை மீறி எங்களால் ஒன்னும் பண்ண முடியாது.​ சார் பக்கத்தில் இருந்தா எங்களை எப்படி பண்ண சொல்லுவாரோ அதை ஃபீல் பண்ணிதான் படத்தை எடுத்திருக்கோம்.

படம் முழுக்க கற்பனை கதைதான்.​ ஆனால் நான் சந்தித்த ஒரே ஒரு கதாபாத்திரம் இருக்கும்.​ முதலில் லண்டனிலேயே முடிக்கிற மாதிரி இருந்தது.​ அதன் பிறகு பயணத்தில் போகலாம்னு நினைத்து,​​ லண்டன்லேர்ந்து காரைக்குடி வந்து முடிச்சிருக்கோம்.

இந்தப் படத்தை ஆகஸ்ட் மூன்றாவது வாரத்தில் ரிலீஸ் பண்ணுவோம்.​ இந்தப் படமும் மிகப் பெரிய வெற்றியை பெறும் என்கிற நம்பிக்கை இருக்கிறது'' என்றார்.


மேலும் தொடரும் செய்திகள்

மீண்டும் சட்டம் ஒரு இருட்டறை!

வெள்ளி 3, செப்டம்பர் 2010 9:44:24 PM (IST)


Sponsored Ads