» சினிமா » செய்திகள்

Share

சிம்புக்கு கிடைத்த புது நாயகி!

வியாழன் 22, ஜூலை 2010 6:23:54 PM (IST)

சிம்பு, சிலம்பரசன் என இனி தனது பெயரை பயன்படுத்தப் போவதில்லை என அதிரடி செய்திருக்கிறார். எஸ்.டி.ஆர் என்று தனது பெயரை சுருக்கிக்கொண்டிருக்கும் சிலம்பரசன் தேசிங்கு ராஜேந்திரன்.

அதாவது அப்பா, தாத்தா இனிஷியலுடன் தனது பெயரை சுருக்கி அரசு கெஜட்டிலும் சத்தமில்லாமல் மாற்றியிருக்கும் சிம்பு, வானம் படத்தில் தனக்கான ஜோடியைக் கண்டுபிடித்துவிட்டார். தனக்கான நாயகியை தேர்வு செய்யும் முழுப் பொறுப்பையும் வானத்தின் இயக்குனர் சிம்புவிடமே கொடுத்துவிட்டாராம்.

இயக்குனர் கொடுக்காவிட்டாலும் பல விஷயங்களைத் தானே முடிவு செய்யும் சிம்பு, ஒரு குட்டி ஐஸ்வர்யா ராய் போல் தோற்றமளிக்கும் சினேகா உல்லாலைத் தேர்வு செய்திருக்கிறார். பாலகிருஷ்னா – நயன்தாரா நடிப்பில் வெளியாகி ஆந்திர பாக்ஸ் ஆபீஸில் தற்போது பட்டையைக் கிளப்பி வரும் சிம்கா படத்தில் உல்லாலும் ஒரு நாயகியாக ஊலலல்லா பாடியிருக்கிறார். அப்படியானால் வானத்தில் அனுஷ்காவுக்கு என்ன வேலை?

அவர் தெலுங்கு வேதத்தில் ஏற்ற அதே பாலியல் தொழிலாளி பாத்திரத்தில் நடிப்பாராம். போனஸாக ஒரு குத்துப் பாடல். சினேகா உல்லால் - எஸ்.டி.ஆர் நடிக்கும் காட்சிகள் ஜூலை 24 முதல் மீண்டும் சென்னையில் படமாக்கப்பட இருகின்றன. வானம் முடித்தபின் லண்டன் கிளம்புகிறார் சிம்பு போடா போடிக்காக!


மேலும் தொடரும் செய்திகள்

மீண்டும் சட்டம் ஒரு இருட்டறை!

வெள்ளி 3, செப்டம்பர் 2010 9:44:24 PM (IST)

விஜய்யுடன் கை கோர்க்கும் அஜித்!

வெள்ளி 27, ஆகஸ்ட் 2010 8:39:24 PM (IST)


Sponsored Ads