» சினிமா » செய்திகள்

இரண்டாவது திருமணம் செய்து மோசடி: பிரபல சின்னத்திரை நடிகை மீது மோசடி புகார்!

திங்கள் 16, ஜூன் 2025 5:44:50 PM (IST)

முதல் கணவருடன் இருக்கும் போதே தன்னை 2-வது திருமணம் செய்து பண மோசடியில் ஈடுபட்டதாக சின்னத்திரை நடிகை ரிஹானா பேகம் மீது ஒருவர் புகார் அளித்துள்ளார். 

விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து பிரபலமானவர் நடிகை நடிகை ரிஹானா பேகம். இவர் மீது ராஜ் கண்ணன் என்பவர் போலீசில் புகார் அளித்துள்ளார். அதில் முதல் கணவருடன் இருக்கும் போதே தன்னை 2-வது திருமணம் செய்து ரூ.20 லட்சம் வரை மோசடி செய்ததாகவும் பணத்தை மீட்டு தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருக்கிறார். 

இருவரையும் நேரில் அழைத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். நடிகை ரிஹானா பேகம், பொன்னி தொடரில் நாயகனின் அம்மாவாகவும், பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் சித்தி பாத்திரத்திலும் நடித்து புகழ் பெற்றவர்.தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

CSC Computer Education




Thoothukudi Business Directory